Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷ்ஷப்பா... கேப்டவுனில் 200வது டெஸ்ட்டை எதிர்கொள்கிறார் டெண்டுல்கர்!

Sachin Tendulkar's 200th Test in Cape Town
ஜோகன்ஸ்பெர்க்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் தமது 200வது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் விளையாட இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி இந்த டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கான இந்திய அணியின் சுற்றுப் பயண விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 18-ந் தேதியன்று இந்திய அணியின் தென்னாப்பிரிக்க பயணம் தொடங்குகிறது. இந்தியா மொத்தம் 2 டி20, 7 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டி டர்பனில் டிசம்பர் 26-ந் தேதி நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெறுகிறது. தற்போதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் டெண்டுல்கர். இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் டெண்டுல்கர் விளையாடினால் 200 டெஸ்ட் போட்டிகளை நிறைவு செய்துவிடுவார். இறுதி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் ஜனவரி 15-ந் தேதி நடைபெற இருக்கிறது.

Story first published: Monday, July 8, 2013, 16:46 [IST]
Other articles published on Jul 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+