Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாதனையே..உன் பெயர் சச்சின் டெண்டுல்கர்தானே!

மும்பை: உலக கிரிக்கெட் வரலாற்றில் கால்நூற்றாண்டு காலமாக கோலோச்சி வரும் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 40 வயது..

16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்து எண்ணற்ற சாதனைகளை சொந்தமாக்கி முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார் சச்சின் டெண்டுல்கர்... இன்று தமது 40வது பிறந்தநாளின் போது ஐபிஎல் 6வது தொடரில் கொல்கத்தா நகரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சுமார் 60 ஆயிரம் ரசிகர்கள் முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார் டெண்டுல்கர்...

தமது 25 வயதிலேயே உலகின் தலைசிறந்த 50 வீரர்களின் பட்டியலில் இணைந்தவர் டெண்டுல்கர்...அவரைப் பற்றி தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விவியன் ரிச்சர்ட்ஸ் சொன்னது இது..."டெண்டுல்கர் சம்திங் ஸ்பெஷல்...அவர் ஆசிர்வதிக்கப்பட்டவர்...என்பதுதான். இதை நிஜமாக்கும் வகையில் தற்போதும் துடிப்போடு விளையாடி வரும் சச்சினின் சாதனைப் பக்கங்களை சற்றே புரட்டுவோம்...

1973 ஏப்ரல் 24

1973 ஏப்ரல் 24

சச்சின் டெண்டுல்கர் என்ற் நட்சத்திரம் மும்பையில் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில்தான் பிறந்தது.

பள்ளிக்கூட சாதனை

பள்ளிக்கூட சாதனை

1988 ஆம் ஆண்டு தமது பள்ளிக்கூட காலத்தில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்களை டெண்டுல்கர் குவித்திருந்தார். இது தொடர்பான ஆவணம் அண்மையில் அவர் படித்த பள்ளிக்கூடத்தால் 'இடமின்மை' காரணமாக எரிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் ரத்த யாகம்

பாகிஸ்தானில் ரத்த யாகம்

தமது 16வயதில் அதாவது 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் வாசிம் அக்ரம், யூனிஸ் போன்ற ஜாம்பவனான்களின் பந்துகளை அனாசயமாக எதிர்கொண்டார். அதுவும் யூனிஸ் பந்தில் முகத்தில் காயம்பட்டு ரத்தம் படிந்த சட்டையுடன் அவர் விளையாடிய காட்சியை இன்றும் அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கின்றனர்.

முதல் டெஸ்ட் சதம்

முதல் டெஸ்ட் சதம்

1990ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் சச்சின் முதலாவது சதத்தை அடித்தார்.

முதல் இரட்டை சதம்

முதல் இரட்டை சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலாவது இரட்டை சதத்தை 1998ஆம் ஆண்டு அடித்தார் டெண்டுல்கர்

கவாஸ்கர் சாதனை முறியடிப்பு

கவாஸ்கர் சாதனை முறியடிப்பு

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்தவர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை 2005ஆம் ஆண்டு டெண்டுல்கர் முறியடித்தார்.

லாராவின் சாதனை முறியடிப்பு

லாராவின் சாதனை முறியடிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11,953 ரன்களை அடித்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிரையன் லாராவின் சாதனையை 2008 ஆம் ஆண்டு முறியடித்தார் சச்சின்

100வது சதமடித்து சாதனை

100வது சதமடித்து சாதனை

சர்வதேச போட்டிகளில் தமது 100வது சதத்தை வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2012 ஆம் ஆண்டு எட்டி மற்றொரு சாதனை படைத்தார் சச்சின்..

டெஸ்ஸ்டில்15, 837 ரன்கள்

டெஸ்ஸ்டில்15, 837 ரன்கள்

சச்சின் டெண்டுல்கர் இதுவரை எடுத்த ரன்களின் எண்ணிக்கை 15,837. இதில் 51 சதங்கள் அடங்கும்..

ஒருநாள் போட்டிகளில் 18426

ஒருநாள் போட்டிகளில் 18426

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 18426 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 49 சதங்கள் அடங்கும்.,

உலகக் கோப்பை போட்டிகளில்..

உலகக் கோப்பை போட்டிகளில்..

உலகக் கோப்பைகளில் சச்சின் இதுவரை 2,278 ரன்களை அடித்திருக்கிறார்.

மொத்த போட்டிகள்

மொத்த போட்டிகள்

சச்சின் டெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் மட்டும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

வாங்கிய விருதுகள்

வாங்கிய விருதுகள்

அர்ஜூனா விருது (1994), ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது (1997-98), பத்மஸ்ரீ விருது (1999), பத்மவிபூஷன் விருது (2008), ராஜ்யசபா எம்.பி.(தற்போது)

கிரிக்கெட் கடவுள்

கிரிக்கெட் கடவுள்

இத்தனை சாதனைகளுக்கும் மேலாக சச்சின் பொதுவாக போற்றப்படுவது ஒற்றை வாசகத்தில்தான்... "கிரிக்கெட் கடவுள்"....நம்பிக்கையில்லாதவர்களும் கூட உச்சரிக்கும் மந்திரம் இது!!

Story first published: Wednesday, April 24, 2013, 13:07 [IST]
Other articles published on Apr 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+