Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் பேட்டில் அடிடாஸ் - எம்.ஆர்.எப்.புடன் ஒப்பந்தம் முடிந்தது

Sachin
டெல்லி: பிரிக்க முடியாதது எதுவோ என்று அந்தக் கால திருவிளையாடல் வசனத்தை இந்தக் காலத்தில் கேட்டால் சச்சினும், எம்.ஆர்.எப் பேட்டும் என்று கூறலாம். அந்த அளவுக்கு இருவரும் இணை பிரியாமல் இருந்தனர்.

இது இப்போது மாறி விட்டது. இனிமேல் சச்சின் பேட்டில் எம்.ஆர்.எப் லோகோ இடம் பெறாது. மாறாக, அடிடாஸ் நிறுவனத்தின் லோகோ இடம் பெறப் போகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சச்சின் பயன்படுத்தி வந்த பேட்டுகளை அலங்கரித்து வந்தது எம்.ஆர்.எப். நிறுவன லோகோக்கள். இந்த ஒப்பந்தம் முடிந்து விட்டது. இதையடுத்து சர்வதேச நிறுவனான அடிடாஸ் நிறுவனத்தின் லோகோக்கள் சச்சின் பேட்டுகளில் இடம் பெறவுள்ளன.

இதுகுறித்து சச்சினின் விளம்பர ஒப்பந்தங்களைக் கையாளும் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஆர்.எப் மற்றும் சச்சின் இடையிலான வர்த்தக உறவு நீடித்தது. தற்போது அடிடாஸுடன் இணைகிறார் சச்சின் என்றார்.

சமீபத்தில்தான் கிரிக்கெட் உலகில் புகுந்தது அடிடாஸ். தங்களது விளையாட்டுத் தயாரிப்புகளை பிரபலப்படுத்த சச்சினுடன் இணையவும் முடிவு செய்தது.

ஏற்கனவே அடிடாஸின் ஸ்போர்ட்ஸ் ஷூ உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் பொருட்களின் பிரான்ட் அம்பாசடராக கடந்த 10 ஆண்டாக சச்சின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த இலங்கை முத்தரப்புத் தொடரின்போது சச்சின் பயன்படுத்திய பேட்டுகளில் அடிடாஸின் லோகோதான் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+