வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணிக்கு பின்னடைவு - டோணி, யுவராஜ், ஆர்.பி.சிங் காயம்

ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயத்தைக் கண்டு கொள்ளாமல், உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில் பங்கேற்க வந்தார் ஷேவாக். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் நாடு திரும்பி விட்டார்.
ஷேவாக்குக் காயம் ஏற்பட்டதை விட அவருக்கும், டோணிக்கும் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் சண்டைதான் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்திய அணி 4 ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்லவுள்ளது. முதல் போட்டி வருகிற 26ம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேப்டன் டோணி, பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங், யுவராஜ் சிங் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாம்.
ஏற்கனவே சச்சின் இல்லை, ஜாகிர்கான் இல்லை, ஷேவாக் இல்லை. இந்த நிலையில் 3 முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பதால் இந்திய அணி நிர்வாகம் கவலையில் ஆழ்ந்துள்ளது.
டோணிக்கு முதுகு வலியாம். யுவராஜ் சிங்குக்கு கால் முட்டியில் அடிபட்டுள்ளது. ஆர்.பி.சிங்குக்கு வலது காலில் காயமாம்.
இந்த மூன்று பேரும் திட்டமிட்டபடி மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் போக முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications