வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா-நியூசி.யை வென்றது பாக்.

டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள் மோதியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்காவுக்கு துவக்க வீரர்களாக சிறப்பாக விளையாடினார்கள். காலிஸ் 45, ஸ்மித் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய கிப்ஸ் 1 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 55 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர்கள் கேப்டன் கெய்ல் (5), பிளட்சர் (0) விரைவில் அவுட்டாகி, ஏமாற்றம் அளித்தனர். சிம்மன்ஸ் (77) மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். பிரேவோ 19, பென் 13 ரன்கள் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சூப்பர்-8 சுற்றில் விளையாடிய இரண்டு போட்டியிலும் வென்ற தென் ஆப்ரிக்கா அரையிறுதி வாய்ப்பை அதிகரித்து கொண்டது.
பாகிஸ்தான் வெற்றி...
மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து, குல் பந்துவீச்சில் கலகலத்து போனது. 18.3 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. குல் 5 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து பேட் செய்த பாகிஸ்தான் 13.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications