ரஞ்சி போட்டியிலிருந்து திடீரென விலகினார் சச்சின்!

இழந்த பார்மைத் திரும்பப் பெற கடு்மையாக போராடி வரும் சச்சின், சர்வதேச போட்டிகளில் ரன் எடுக்கத் திணறிக் கொண்டிருக்கிறார். இதனால் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்தநிலையில் அவர் ரஞ்சிப் போட்டிக்கான மும்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அவரே விலகி விட்டாராம்.
மும்பை அணி டிசம்பர் 22ம் தேதி மத்தியப் பிரதேசத்துடன் மோதவுள்ளது. இதற்கான அணியில் சச்ிசன் சேர்க்கப்படவில்லை. அதேசமயம், ஜாஹிர் கான் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர் ரஞ்சிப் போட்டியில் சச்சின் ஆடினார். அதில் அவர் ஒரு சதமும் போட்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக பட்டையைக் கிளப்புவார் சச்சின் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களைக் கைவிட்டு விட்டார்.
ஒரு சதம் கூடப் போடாமல் இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டித் தொடரை முடித்தார் சச்சின். மொத்தமே இந்த நான்கு போட்டிகளிலும் அவர் 112 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். விலகலுக்கான காரணம் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications