டி 20 தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இந்தியா தொடர்ந்து 3வது இடம்!
துபை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டி 20 தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி தொடர்ந்தும் 3வது இடத்தில் இருக்கிறது.
ஜூலை 27-ந் தேதியன்று பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளிடையே 2 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக இன்று டி 20 தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் 134 புள்ளிகளுடன் இலங்கை அணி முதலிடத்திலும், 127 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இடத்திலும் இருக்கின்றன. இந்திய அணி 121 புள்ளிகளுடன் தொடர்ந்து 3வது இடத்திலேயே இருக்கிறது.
118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 4, 113 புள்ள்களுடன் இங்கிலாந்து 5, தென்னாப்பிரிக்கா 112 புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளன.
மொத்தம் 16 நாடுகளில் ஆப்கானிஸ்தானும் கனடாவும் போதுமான போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் 14 அணிகளைக் கொண்டே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications