Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா வெல்லாதது பெரும் ஏமாற்றம் - சச்சின் வருத்தம்

Sachin Tendulkar
ஹைதராபாத்: நான் 175 ரன்கள் எடுத்தது எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. ஆனால், இந்தியா வெல்லாமல் போனதுதான் எனக்கு பெரும் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஹைதராபாத் ஒரு நாள் போட்டியில் நேற்று சச்சின் ஆடிய தாண்டவம், உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. ருத்ரதாண்டவம் போல சச்சின் ஆடிய ஆட்டம் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங்கை கிட்டத்தட்ட அழும் அளவுக்குக் கொண்டு போய் விட்டது.

ஆனாலும் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இந்தியா 3 ரன்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது இந்திய ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது. இதே ஏமாற்றம் சச்சினிடமும் உள்ளது.

நேற்றைய போட்டி குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், எனது முயற்சிக்கு முழு பலன் கிடைத்திருப்பதாக நான் நினைத்திருப்பேன்.

மிகச் சிறப்பாகவே நாங்கள் ஆட்டத்தைத் தொடங்கினோம். எனக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தது. ஆனால் சில முக்கிய விக்கெட்களை நாங்கள் முக்கியமான தருணத்தில் இழக்க நேரிட்டு விட்டது. இதுவே போட்டியையும் இழக்க காரணமாகி விட்டது.

நேற்றைய நாளின் இறுதியில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன்.

இந்த சதம், எனது கிரிக்கெட் சதங்களில் முக்கியமானதா என்று கேட்டால் ஓரளவுக்கு ஒப்புக் கொள்வேன் என்றார் சச்சின்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:32 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+