Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிடையர்மென்ட்டுக்கு இப்போ என்ன அவசரம்?: சச்சின் டெண்டுல்கர்

மும்பை: ஓய்வு பெறுவதற்கு தற்போது என்ன அவசரம் என்று லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி நவம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அது 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் விளையாடுவார் என்று தெரிகிறது. இத்துடன் சேர்த்தால் சச்சின் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை பெறுவார்.

இந்த 200வது போட்டிக்கு பிறகு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து சச்சின் மனம் திறந்துள்ளார்.

என்ன அவசரம்?

என்ன அவசரம்?

தற்போது நான் ஓய்வு பெற வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அதற்கு தற்போது என்ன அவசரம்? என்றார் சச்சின்.

நான் கடவுள் இல்லை

நான் கடவுள் இல்லை

ரசிகர்கள் சச்சினை கிரிக்கெட்டின் கடவுள் என்று கூறுவது குறித்து கேட்டதற்கு, நான் கிரிக்கெட் விளையாடுகிறேன் அவ்வளவு தான். நான் கடவுள் கிடையாது என்றார்.

அப்பாவை மிஸ் பண்ணுகிறேன்

அப்பாவை மிஸ் பண்ணுகிறேன்

என் அப்பா 1999ம் ஆண்டு இறந்தார். அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அவர் இறந்த பிறகு பல்வேறு நிகழ்வுகள் நடந்துவிட்டன. அவர் உயிருடன் இருந்தபோது நடந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன் என்று சச்சின் தெரிவித்தார்.

கனவு கார்

கனவு கார்

சிறுவயதில் என்னுடைய கனவு கார் என்றால் அது மாருது 800 தான் என்று சச்சின் கூறினார்.

Story first published: Wednesday, September 4, 2013, 15:04 [IST]
Other articles published on Sep 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+