இராணி கோப்பை கிரிக்கெட்-சச்சின் திடீர் விலகல்

சமீபத்தில் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த சச்சின் ஒரு போட்டியிலும் சரியாக விளையாடவில்லை. பூரண உடல் தகுதியுடன் பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் எல்போ பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சச்சினை எதற்காக அணியில் சேர்த்து அவரும் விளையாடாமல், அடுத்தவர்களையும் விளையாட வாய்ப்பளிக்காமல் செய்தார்கள் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் போட்டிக்கான தொடரில் சச்சின் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் பத்ரிநாத்தை சேர்த்தனர். நல்ல பார்மில் இருந்த அவரை அனைத்துப் போட்டிகளிலும் விளையாட விடவில்லை.
இந்த நிலையில் இராணி கோப்பைப் போட்டியில் விளையாட பூரண தகுதியடைந்திருப்பதாக சச்சின் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை இராணி கோப்பைப் போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் சச்சின் இடம் பெற்றார். ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும், ரஞ்சி சாம்பியனான டெல்லி அணியும் வதோதராவில் வருகிற 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் எல்போ பிரச்சினை சரியாகவில்ைல என்று கூறி சச்சின் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
இதுகுறித்து இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சச்சினின் எல்போவில் இன்னும் இறுக்கம் காணப்படுகிறது. எனவே அவர் போட்டியில் விளையாடாமல்இருப்பது நல்லது என்று தேசிய கிரிக்கெட் அகாடமி பிசியோதெரப்பிஸ்ட் பால் க்ளோஸ் அறிவுறுத்தியுள்ளஆர்.
எனவே சச்சின் இப்போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் யாரை சேர்ப்பது என்பது குறித்து நாளை மாலை முடிவு செய்யப்படும் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications