Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா தோற்றாலும்.. சச்சின்தான் மேன் ஆப் தி மேட்ச்.. சுவாரஸ்ய சாதனை!

Sachin Tendulkar
பெங்களூர்: ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் அவுட் என்று சொல்வார்கள். அதேபோல சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடியிருப்பார், மேன் ஆப் தி மேட்ச் எல்லாம் வென்றிருப்பார். அதேசமயம், இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கும். இதிலும் கூட அதிக முறை தோல்விப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்று சாதனை படைத்தவர் சச்சின்தான்.

சச்சின் டெண்டுல்கர் செய்யாத சாதனையே இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் அவர் படைக்காத வரலாறு இல்லை. அதையெல்லாம் முறியடிக்க புதிதாக யாராவது பிறந்துதான் வர வேண்டும்.

அதே சச்சினிடம்தான் இந்த வித்தியாசமான சாதனையும் உள்ளது. இந்தியா தோற்ற பல போட்டிகளில் சச்சினுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது. அதை அதிக முறை வாங்கிய வீரராக சச்சின் திகழ்கிறார் என்பதே அந்த சாதனை. இதை அதிகாரப்பூர்வ சாதனையாக இதுவரை ஐசிசி அறிவிக்கவி்ல்லை என்பது வேறு விஷயம்.

இந்தியாவுக்காக 463 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார் சச்சின். அதில், 18,426 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 44.83 ஆகும். இதில் 49 சதங்கள், 96 அரை சதங்கள் அடக்கம்.

இந்தியா சர்வதேச அளவில் தோல்வியுற்ற 6 போட்டிகளில் சச்சினுக்கு மேன் ஆப் தி மேட்ச் பரிசு கிடைத்துள்ளது.

அதேபோல இந்தியா தோல்வியுற்ற 13 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து கலக்கியுள்ளார். அதில் ஒரு டை போட்டியும், ஒரு முடிவில்லாத போட்டியும் அடக்கம்.

சச்சின் விளையாடாவிட்டால் இந்தியா தோற்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் சச்சின் நன்றாக விளையாடியும் கூட இந்தியா தோற்றுள்ளது ஒரு சுவாரஸ்யமான வேதனைதான்.

Story first published: Monday, December 3, 2012, 15:26 [IST]
Other articles published on Dec 3, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+