முத்தரப்பு தொடர்-44வது சதம் விளாசினார் சச்சின்

இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் இலங்கையில் நடக்கிறது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை மோதி வருகின்றன.
கடைசி லீக் போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்த இந்தியா வெற்றி பெறும் முனைப்புடன் களம் கண்டது. அதே நேரத்தில் டாஸூம் கைகொடுக்க, நம்மவர்கள் முதலில் பேட்டிங் செய்தனர்.
இப்போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, விராத் கோஹ்லி இடம்பிடித்தார். இதையடுத்து சச்சினுடன், டிராவிட் ஆட்டத்தை துவக்கினார்.
சூப்பராக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிட் அவுட்டானார். அவர் 1 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த கேப்டன் டோணி, சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். அவர் 62 பந்தில் 56 ரன்கள் எடுத்து மலிங்கா வேகத்தில் வெளியேறினார்.
மறுமுனையில் சூப்பராக விளையாடிய சச்சின் சதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரது 44வது சதமாக அமைந்தது. அவர் 133 பந்தில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
யுவராஜ் அதிரடி...
கடைசிக்கட்டத்தில் இலங்கை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய யுவராஜ் 1 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 41 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications