சன் டிவி ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக டாம் மூடி நியமனம் - 'குரு' ஆனார் 'சூப்பர் கிங்ஸ்' ஸ்ரீகாந்த்

சன் டிவி குழுமம் சமீபத்தில் ஹைதராபாத் ஐபிஎல் அணியை ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து அந்த அணிக்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிட்டது. இந்த நிலையில் தற்போது அணி நிர்வாகிகளை அந்த அணி அறிவித்துள்ளது.
அணியின் பயிற்சியாளராக டாம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு மூடி, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு அவர் வந்துள்ளார்.
அணியின் புதிய லோகோவையும் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சன் குழுமம் வெளியிடவுள்ளது.
அணியின் மென்டார்களாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாந்த் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடராக செயல்பட்டு வந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Thursday, December 20, 2012, 14:16 [IST]
Other articles published on Dec 20, 2012


Click it and Unblock the Notifications