Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையிடம் இந்தியா மாபெரும் தோல்வி

கிங்ஸ்டன்: முத்தரப்பு தொடரில் இந்தியா தொடர்ச்சியான 2வது தோல்வியைச் சந்தித்து தலையை தொங்கப் போட்டுக் கொண்டுள்ளது. நேற்று நடந்த இலங்கையுடனான போட்டியில் 161 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.

ஏற்கனவே முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.

இந்த நிலையில் நேற்று நடந்த 2வது போட்டியில் விராத் கோஹ்லியின் தலைமையில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அசத்திய இந்தியாவா இது என்று பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் இந்த தொடர் தோல்வி.

இலங்கையின் பேட்டிங் எழுச்சி

இலங்கையின் பேட்டிங் எழுச்சி

முதலில் பேட் செய்த இலங்கை பேட்டிங்கில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த அணி சார்பில் 2 சதங்கள் போடப்பட்டன.

உபுல் தரங்கா ஆட்டமிழக்காமல் 174

உபுல் தரங்கா ஆட்டமிழக்காமல் 174

உபுல் தரங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 174ரன்களைக் குவித்தார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். அவரும் ஜெயவர்த்தனேவும் சேர்ந்து 213 ரன்களைக் குவித்தனர்.

ஜெயவர்த்தனே 107

ஜெயவர்த்தனே 107

அதேபோல இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான மஹளா ஜெயவர்த்தனே 112 பந்துகளில் 107 ரன்களைக் குவித்தார்.

மாத்யூஸ் அபாரம்

மாத்யூஸ் அபாரம்

மறு முனையில் கேப்டன் மாத்யூஸ் 29 பந்துகளில் 44 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

விக்கெட் 1... ரன் 348

விக்கெட் 1... ரன் 348

இறுதியில் 50 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 348 ரன்களைக் குவித்தது இலங்கை

சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

இதையடுத்து சேஸிங்கைத் தொடங்கிய இந்தியா சொதப்பி விட்டது. ரவீந்திர ஜடேஜா, ரெய்னாவைத் தவிர மற்றவர்கள் பெரிய ஸ்கோரை எட்டவே முயற்சிக்கவில்லை.

ரோஹித் 5 - தவன் 24

ரோஹித் 5 - தவன் 24

நம்பிக்கை நட்சத்திரங்களான தவன் 24 ரன்களில் வீழ்ந்தார். ரோஹித் சர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

முரளி விஜய் பரவாயில்லை

முரளி விஜய் பரவாயில்லை

முரளி விஜய் சற்றே பரவாயில்லை என்று சொல்லும் வகையி்ல ஆடி 30 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.

விராத் கோஹ்லி 2

விராத் கோஹ்லி 2

விராத் கோஹ்லி 5 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 ரன்களுடன் வெளியேறினார்.

திணேஷ் கார்த்திக் 22

திணேஷ் கார்த்திக் 22

விக்கெட் கீப்பர் திணேஷ் கார்த்திக் 22 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

ரெய்னா ரன் அவுட்

ரெய்னா ரன் அவுட்

அடித்து ஆடி வந்த சுரேஷ் ரெய்னா 33 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

ஆட்டமிழக்காத ஜடேஜா

ஆட்டமிழக்காத ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 49 ரன்களைச் சேர்த்தார்.

இறுதியில் 44.5 ஓவர்களில் அத்தனை விக்கெட்களையும் இழந்து 187 ரன்களுடன் சுருண்டு போனது இந்தியா.

Story first published: Wednesday, July 3, 2013, 9:04 [IST]
Other articles published on Jul 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+