இரண்டாவது போட்டி:இந்தியா தோல்வி-டோணி ஆறுதல்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு்ள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. நேற்று இரண்டாவது போட்டி கிங்ஸட்ன், சபினா பார்க் மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற கேப்டன் டோணி மீண்டும் பேட்டிங் தேர்வு செய்தார். முதல் போட்டியில் 339 ரன்கள் எடுத்த அணி இன்று 300 ரன்களை தாண்டும், பேட்ஸ்மேன்கள் வாணவேடிக்கை காட்டுவார்கள் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால், கதை வேறு மாதிரி ஆகிவி்ட்டது. இந்திய வீரர்கள் மைதானத்துக்குள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். தினேஷ் கார்த்திக் 4 ரன்களுக்கு அவுட்டானார்கள். கம்பீர், ஹோகித் சொல்லி வைத்தார் போல் டக் அவுட்டாகி வெளியேறினார்கள்.
டோணி சதம் நழுவல்...
அடுத்து வந்த கேப்டன் டோணி, யுவராஜூடன் ஜோடி சேர்ந்தார். முதல் போட்டியை போல் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த யுவராஜ் 1 சிக்சர், 5 பவுண்டரி 33 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
அடுத்த வந்த அதிரடி யூசுப் பதான் ரன்கள் எடுக்காமலும், ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹர்பஜன் தலா 7 ரன்களுக்கும், பிரவீண் 1 ரன்னுக்கும் அவுட்டானார்கள்.
இதையடுத்து இந்திய அணி 82 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து திணறியது. அடுத்து வந்த ஆர்பி சிங் ஒத்துழைப்பு கொடுக்க டோணி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்பி சிங் அவுட்டானார். அவர் 75 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். டோணி 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 130 பந்தில் 95 ரன்கள் எடு்த்து, சதம் கடக்கும் வாய்ப்பை 5 ரன்களில் நழுவவிட்டார்.
இந்திய அணி 48.2 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல், மார்டன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அதிரடியாக பேட் செய்த கெய்ல் 46 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். சர்வான் 15 ரன்களுக்கு அவுட்டானார். மார்டன் 85, சந்தர்பால் 18 இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 34.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் 3ம் தேதி செயின்ட் லூசியாவில் நடக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications