Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் கடவுளே யுவராஜுக்கு இப்படியொரு நோயைக் கொடுத்தாய்.. சச்சின் உருக்கம்

டெல்லி: கடவுளைப் பார்த்து ஏன் யுவராஜ் சிங்குக்கு புற்றுநோயைக் கொடுத்தாய் என்று கேட்க நினைக்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

யுவராஜ் சிங் குறித்த சுயசரிதை நூல் வெளியீடு டெல்லியில்நடந்தது. அதில் கேப்டன் டோணி, சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சச்சினின் பேச்சுதான் உருக்கமாக இருந்தது.

யுவராஜ் சிங்கை லண்டனில் பார்த்தபோது நடந்த விஷயங்களை மிகவும் உருக்கமாக விவரித்தார் சச்சின். சச்சினின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

பார்க்கவே பயந்தேன்

பார்க்கவே பயந்தேன்

நானும் எனது மனைவி அஞ்சலியும் லண்டன் போயிருந்தபோது அங்கு எங்களை சந்தித்தார் யுவராஜ். அதற்கு முன்பு நான் அவரைப் பார்க்கவே பயந்தேன். காரணம், என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தால்.

நான் அழக்கூடாது, அஞ்சலி

நான் அழக்கூடாது, அஞ்சலி

எனது மனவியிடம், நான் கூறுகையில்,யுவராஜைப் பார்க்கும்போது நான் அழாமல் இருக்க வேண்டும் என்று கூறினேன். காரணம் நான் உணர்ச்சிகரமாக இருந்தேன்.

கட்டித் தழுவினேன்

கட்டித் தழுவினேன்

பின்னர் யுவராஜைப் பார்த்தபோது இருவரும் கட்டித் தழுவிக் கொண்டோம். பிறகு அமர்ந்து நீண்ட நேரம் பேசினோம்.

சாப்பிட்ட வேகம் இருக்கே

சாப்பிட்ட வேகம் இருக்கே

பிறகு நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டபோது யுவராஜ் சிங் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து, சரி இவர் குணமாகியிருக்கிறார், பிரச்சினை இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்.

தெறித்து விழுந்த நம்பிக்கை

தெறித்து விழுந்த நம்பிக்கை

பின்னர் எனது மனைவி யுவராஜிடம் எடுத்துவரும் சிகிசிச்சை உள்ளிட்டவை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் யுவராஜையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது யுவராஜ் பேசிய விதத்தைப் பார்த்தபோது அவர் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார் என்பது தெரிய வந்தது.

என் அருமைத் தம்பி

என் அருமைத் தம்பி

யுவராஜ் சிங் எனது தம்பி போல. அவருக்கு இப்படி ஒரு நோய் வந்தது எனக்கு பெரும் வருத்தம் தந்தது. கடவுளை சந்திக்க நேர்ந்தால், ஏன் யுவராஜுக்கு இப்படி ஒன்றைக் கொடுத்தாய் என்று நிச்சயம் கேட்பேன் என்று உருக்கமாக பேசினார் சச்சின்.

Story first published: Wednesday, March 20, 2013, 13:48 [IST]
Other articles published on Mar 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+