Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினுக்கு செமத்தியான பிரியாவிடை.. மும்பை இந்தியன்ஸ் 'பிளானிங்'!

பெங்களூர்: சச்சின் 200வது டெஸ்ட் ஆடிய பிறகு ஓய்வு பெறுகிறாரோ இல்லையோ, அதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று அவரது கையில் கொடுத்து பிரமாதமாக பிரியாவிடை அளிக்க முடிவு செய்துள்ளனராம்.

இந்த மாத இறுதியில் இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸும் பங்கேற்கிறது.

இதுவே சச்சினுக்கு கடைசி சாம்பியன்ஸ் லீக் போட்டித் தொடராக இருக்கும் என்பதால் அவருக்குக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்து சிறப்பாக வழியனுப்பி வைக்க மும்பை இந்தியன்ஸ் அணியினர் தயாராகி வருகின்றனராம்.

ஐபிஎல்லிலிருந்து ஓய்வு

ஐபிஎல்லிலிருந்து ஓய்வு

ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.

ஒரு நாள் போட்டிகளுக்கும் குட்பை

ஒரு நாள் போட்டிகளுக்கும் குட்பை

அதேபோல ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் அவர் விடை பெற்று விட்டார்.

டெஸ்ட்...

டெஸ்ட்...

டெஸ்ட் போட்டிகளிலிருந்து இன்னும் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை. 200வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் அவர் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சச்சினோ, அப்படியெல்லாம் திட்டம் இல்லை என்று சொல்லி வருகிறார்.

கடைசி சாம்பியன்ஸ்

கடைசி சாம்பியன்ஸ்

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடர்தான் அவருக்கு கடைசி சாம்பியன்ஸ் லீக் போட்டியாக இருக்கும் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணியினர் வெற்றியைப் பறிக்க முனைப்பாகி வருகின்றனர்.

2 கோப்பைகள்

2 கோப்பைகள்

சச்சினின் சொந்த ஊரான மும்பையில் நடந்த கடந்த உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா வென்று சச்சினைப் பெருமைப்படுத்தியது. அதேபோல ஐபிஎல் கோப்பையையும் மும்பை இந்தியன்ஸ் கடந்த முறை வென்று சச்சினை மகிழ்வித்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் டிராபியையும் வென்று தர மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

வென்றால் இது 2வது முறை

வென்றால் இது 2வது முறை

மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே ஹர்பஜன் சிங் தலைமையில், 2011ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது. இந்த முறை வென்றால் அது 2வது முறையாகும்.

தீவிரப் பயிற்சியில் சச்சின்

தீவிரப் பயிற்சியில் சச்சின்

சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக தீவிரப் பயிற்சியில் இறங்கியுள்ளார் சச்சின்.

Story first published: Tuesday, September 10, 2013, 17:35 [IST]
Other articles published on Sep 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+