சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு -யுவி, காம்பீர் நீக்கம்!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜுன் 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சந்தீப் பட்டேல் தலைமையிலான தேர்வுக் குழு இன்று அறிவித்தது. இந்தப் பட்டியலில் மூத்த வீரர்களான காம்பீர், யுவராஜ்சிங் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோருடன் இர்பான்பதான், உமேஷ்யாதவ், வினய்குமார், ஷிகார் தவான் இடம் பிடித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: டோணி (கேப்டன்), முரளி விஜய், கோஹ்லி, இர்பான் பதான், உமேஷ் யாதவ், வினய்குமார், தவான், ரெய்னா, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, அமித்மிஸ்ரா.
Story first published: Saturday, May 4, 2013, 16:16 [IST]
Other articles published on May 4, 2013


Click it and Unblock the Notifications