Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவம்.. மனுஷன் உயிரை கொடுத்து விளையாடுகிறார்.. 7 வருடங்களுக்கு பின் ஸ்ரீசாந்த் செய்த சாதனை.. செம

திருவனந்தபுரம்: 2021 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை ஸ்ரீசாந்த் படைத்து இருக்கிறார்

ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் கேரள வீரர் ஸ்ரீசாந்த் தற்போது சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அவர் தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறார்.

ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீசாந்த் மீதான தடை காலம் முடிவிற்கு வந்த நிலையில் மீண்டும் முதல்தர போட்டிகளில் அவர் ஆடி வருகிறார்.

எப்படி

எப்படி

சில நாட்கள் இவர் பாஜகவில் சேர்ந்து அரசியலில் தீவிரம் காட்டினார். தற்போது பழைய பார்மிற்கு திரும்பி வந்து இருக்கும் ஸ்ரீசாந்த் தற்போது பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இவர் தனது பெயரை பதிவு செய்தார். ஆனாலும் இவர் பெயர் தேர்வு செய்யப்படவில்லை.

தேர்வு

தேர்வு

இதனால் இவர் ஐபிஎல்லுக்கு திரும்புவது கனவாக மாறியது. இந்த நிலையில் சையது முஷ்டாக் கோப்பை போட்டிக்கான கேரளா அணியில் ஸ்ரீசாத் சேர்க்கப்பட்டடார். கேரளா அணிக்காக ஆடிய இவர் சிறப்பாக பந்து வீசி கவனம் ஈர்த்தார்.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில் ஸ்ரீசாந்த் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் அதிரடியாக ஆடி வருகிறார். விஜய் ஹசாரே கோப்பையா போட்டியில் கேரளா அணிக்காக பந்து வீசி ஒவ்வொரு போட்டியிலும் 3-4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த வருட சீசனில் இவர்தான் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார்.

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

2021 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை ஸ்ரீசாந்த் படைத்து இருக்கிறார். இதுவரை 13 விக்கெட்களை எடுத்து ஸ்ரீசாந்த் இந்த சாதனையை படைத்துள்ளார். 7 வருடங்களுக்கு பின் திரும்பி வந்தாலும்., கொஞ்சம் கூட அந்த சுவடே இன்று தொடர்ந்து இவர் அதிரடியாக பவுலிங் செய்து வருகிறார் .

Story first published: Sunday, February 28, 2021, 14:26 [IST]
Other articles published on Feb 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+