Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது ஹிந்தியில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

சர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீசாந்த், கிரிக்கெட் உலகில் இருந்து சூதாட்ட சர்ச்சைகளால் தடை செய்யப்பட்டார். அடுத்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என வேறு பாதையில் பயணித்து வருகிறார்.

அவரது சர்ச்சை முகத்தை காசாக்குவதில் மீடியாவை சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த்தின் சம்பளம் மற்றும் சிக்கலை பற்றி பார்க்கலாம்.

[குல்தீப் யாதவ் புதிய சாதனை.. ஜடேஜா, அஸ்வின் செய்ய முடியாததை செய்து காட்டினார்]

ஐந்து லட்சம் சம்பளம்

ஐந்து லட்சம் சம்பளம்

ஸ்ரீசாந்த் ஹிந்தியில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார் என செய்திகள் வந்த போது, கூடவே அவருக்கு தான் பிக் பாஸ் வரலாற்றில் மிக மிக குறைவான சம்பளம். வாரத்திற்கு ஐந்து லட்சம் மட்டுமே அவருக்கு சம்பளம் என கூறப்பட்டது.

இல்லை.. ஐம்பது லட்சம்

இல்லை.. ஐம்பது லட்சம்

எனினும், இப்போது வந்துள்ள ஒரு செய்தி அதற்கு நேர்மாறாக உள்ளது. அதாவது, ஹிந்தி பிக் பாஸ் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நபர் ஸ்ரீசாந்த் தான் என தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்ரீசாந்துக்கு ஒரு வாரத்துக்கு ஐம்பது லட்சம் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இரண்டு காரணங்கள்

இரண்டு காரணங்கள்

ஸ்ரீசாந்த் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது. முன்பு சல்மான் கான், ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக இருந்துள்ளார் என்பதால் அவர் இருக்கும் நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்துள்ளது. அடுத்து, பிக் பாஸ் வரலாற்றிலேயே இவருக்கு தான் அதிக சம்பளம் என்பது இரண்டாவது காரணம்.

வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்

வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்

இந்த நிலையில், பிக்பாஸ் துவங்கிய முதல் வாரத்திலேயே ஸ்ரீசாந்த் தனக்கு பிடிக்காத சூழ்நிலை இருப்பதால் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்யப் போகிறேன் என கூறி இருக்கிறார். அவர் அப்படி வெளியேறினால், இழப்பீடாக ஐம்பது லட்சம் கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்ற விதி இருப்பதால், வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியில் தொடர்கிறார் ஸ்ரீசாந்த் என கூறப்படுகிறது. கொடுத்த காசை திரும்பி வாங்கிக் கொண்டு தான் வெளியே அனுப்புவார்கள் என்பதால் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயே இருக்கிறார் ஸ்ரீசாந்த். அவரை வைத்து என்னென்ன சர்ச்சைகள் செய்து பரபரப்பை கூட்டப் போகிறார்களோ.. தெரியவில்லை.

Story first published: Friday, April 17, 2020, 21:38 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+