Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குல்தீப் யாதவ் புதிய சாதனை.. ஜடேஜா, அஸ்வின் செய்ய முடியாததை செய்து காட்டினார்

ராஜ்கோட் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.

மிகவும் சில பந்துவீச்சாளர்களே உலக அரங்கில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். குல்தீப் இதுவரை மிக சில சர்வதேச போட்டிகளே ஆடியுள்ளார். அதற்குள், இந்த அரிய சாதனையை நிகழ்த்தி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

"அப்படி என்ன சாதனைப்பா?"னு தானே கேட்கிறீர்கள். ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்துவதில் தான் சாதனை படைத்துள்ளார் குல்தீப்.

[வாய்ப்பை பயன்படுத்திய அஸ்வின்.. அதிக விக்கெட்கள் பட்டியலில் முன்னணி வீரரை முந்தினார்]

3 வித கிரிக்கெட்டிலும் 5

3 வித கிரிக்கெட்டிலும் 5

குல்தீப் யாதவ் தற்போது நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்டில் ஆறு விக்கெட்கள் வீழ்த்தினார். இதற்கு முன் இங்கிலாந்தில் நடந்த டி20 தொடரின் முதல் போட்டியிலும், ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் ஐந்து விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.

பட்டியலில் இடம் பிடித்தார்

பட்டியலில் இடம் பிடித்தார்

இதன் மூலம் மூன்று வித கிரிக்கெட்டிலும் ஒரே போட்டியில் ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஏழாவதாக இடம் பெற்றுள்ளார். இந்த சாதனையை செய்யும் இரண்டாவது பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆவார்.

இந்தியாவில் இரண்டாவது வீரர்

இந்தியாவில் இரண்டாவது வீரர்

இந்த சாதனையை முதலில் செய்த இந்தியர் புவனேஸ்வர் குமார். அவர் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய ஒரே இந்தியராக இருந்தார். தற்போது, குல்தீப் அவரோடு இணைந்துள்ளார். உலக அரங்கில் இந்த சாதனையை செய்த மற்ற ஐந்து வீரர்கள் - டிம் சௌதீ (நியூசிலாந்து), உமர் குல் (பாகிஸ்தான்), இம்ரான் தாகிர் (தென்னாபிரிக்கா), அஜந்தா மென்டிஸ் (இலங்கை), மற்றும் லசித் மலிங்கா (இலங்கை).

அஸ்வின், ஜடேஜா செய்யாதது

அஸ்வின், ஜடேஜா செய்யாதது

இந்திய அணியில் நீண்ட காலமாக ஆடி வரும் அஸ்வின், ஜடேஜா இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களாக இருந்து வருகிறார்கள். புவனேஸ்வர், பும்ரா தவிர்த்து நம்பிக்கையான பந்துவீச்சாளர்கள் என்றால் இந்தியாவில் இப்போதைக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா தான். அவர்களால் செய்ய முடியாத சாதனையை மிக சில போட்டிகளே ஆடி இருக்கும் குல்தீப் செய்துள்ளார் என்பது ஆச்சரியம் தான். மூத்த வீரர்கள் இருக்கும் போது இவர் அணியில் இடம் பெற்றதில் ஆச்சரியமே இல்லை. விரைவில் இதே சாதனையை பும்ரா செய்வாரா?

Story first published: Friday, April 17, 2020, 21:41 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+