தடை போட்டப்ப தற்கொலை எண்ணம் வந்துச்சு.. கண்கலங்கிய ஸ்ரீசாந்த்.. கல்லா கட்டும் பிக்பாஸ்
Recommended Video

மும்பை : முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் பிக்ஸிங் சர்ச்சை எழுந்த போது தற்கொலை எண்ணத்தில் இருந்ததாக கூறி உள்ளார்.
ஸ்ரீசாந்த் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால், பிசிசிஐ ஸ்ரீசாந்த் உட்பட மூன்று வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தது. அந்த சமயத்தில் தான் தற்கொலை எண்ணத்தில் இருந்ததாக கூறினார்.

தற்கொலை எண்ணம் வந்தது
ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 12-ல் பங்கேற்றுள்ள ஸ்ரீசாந்த் தன் கிரிக்கெட் தடையை பற்றி ஒரு காட்சியில் பேசினார். அப்போது தான் எந்த தவறும் செய்யாத நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடையால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், பின் தற்கொலை எண்ணத்தில் இருந்ததாகவும் கூறி அழுதார்.

உடைந்து அழுதார்
இதன் பின் ஸ்ரீசாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுகளை உடைத்தார். தற்போது தனக்கு எந்த மைதானத்திலும் நுழையக்கூடாது என தடை விதித்துள்ளார்கள் என கூறிய ஸ்ரீசாந்த், நாளை தன் மகன் கிரிக்கெட் ஆடினால் கூட அதை நேரில் காண முடியாது என கூறி உடைந்து அழுதார்.

நக்கல் செய்த பழைய முதலாளி
அந்த சர்ச்சை சமயத்தில் தனக்கு 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது. இந்த வீடியோவின் கீழே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் குந்த்ரா சிரிக்கும் பொம்மை படத்தை பதிவிட்டு "உச்சம்" என நக்கலாக கூறி இருந்தார்.

சம்பளம் தரலை
இதை கண்டு கடுப்பான ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, குந்த்ரா ஸ்ரீசாந்துக்கு தர வேண்டிய சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை என கூறி அவரை சாடியுள்ளார்.
எனக்கு ஒண்ணு மட்டும் நல்லா புரியுது.. ஸ்ரீசாந்தை வைச்சு ஹிந்தி பிக் பாஸ்-ஓட டிஆர்பி எகிறுது!!


Click it and Unblock the Notifications