Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் நிரூபித்த பவுலர்கள்... கொல்கத்தாவை வீழ்த்தி பைனல்ஸ் நுழைந்தது ஹைதராபாத்!

Recommended Video

கொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்- வீடியோ

கொல்கத்தா: ஐபிஎல்லில் மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணி என்பதை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் நிரூபித்தது. கொல்கத்தாவை 13 ரன்களில் வென்று, பைனல்ஸ் முன்னேறியது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சீசன் 11ன் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே முன்னேறியுள்ளது. முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று சிஎஸ்கே 7வது முறையாக பைனல்ஸ் நுழைந்துள்ளது.

1
43469

முதல் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த ஹைதராபாத், எலிமினேட்டரில் வெற்றியடைந்த கொல்கத்தா உடன் இன்று நடந்த 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடியது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, 27ம் தேதி மும்பையில் நடக்கும் பைனல்ஸ் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.

திணறும் ஹைதராபாத்

திணறும் ஹைதராபாத்

மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணியான ஹைதராபாத், இந்த சீசனின் துவக்கத்தில் மிகவும் அபாரமாக விளையாடி, அனைத்து அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. முதல் 11 ஆட்டங்களில் 9ல் வென்றது. ஆனால், கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

தினேஷ் அபாரம்

தினேஷ் அபாரம்

தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா, இந்த சீசனில் பாதி ஆட்டங்கள் முடிந்திருந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. மும்பையிடம் 102 ரன்களில் மிகப் பெரிய தோல்வி அடைந்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ந்து 4 ஆட்டங்களில் வென்றது.

ரஷீத் கான் அதிரடி

ரஷீத் கான் அதிரடி

இந்த நிலையில் இன்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சாகா 35, ஷிகார் தவான் 34, ஷாகிப் அல் ஹசன் 28 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பவுலர் ரஷீத் கான் 10 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார்.

பைனல்சில் ஹைதராபாத்

பைனல்சில் ஹைதராபாத்

175 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியுள்ளது. கிறிஸ் லைன் 48,சுனில் நரேன் 26, ரானா 22 ரன்கள் எடுத்தனர். கடைசியில் போராடிய ஷப்னம் கில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணி என்பதை ஹைதராபாத் மீண்டும் நிரூபித்தது. கொல்கத்தாவை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை வீழ்த்தி 161 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 13 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைந்தது ஹைதராபாத். ரஷீத் கான் பேட்டிங்கில் கலக்கியதுடன், 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். மேலும் 2 கேட்ச்களையும் பிடித்தார்.

Story first published: Friday, May 25, 2018, 23:09 [IST]
Other articles published on May 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+