For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாட்டி கிட்டியே பங்கு.. கேர்ள் பிரெண்ட்டுக்கு ஹாரி புருக் கொடுத்த சப்ரைஸ்.. கடுப்பான பெற்றோர்கள்

கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புருக்13 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணி வாங்கியது. இங்கிலாந்து அணியில் இடம் பிடித்த சில மாதங்களில் ஸ்டார் ஆனவர் தான் ஹாரி புருக்.

இதனால் ஐதராபாத் அணியின் எதிர்காலத்திற்காக ஹாரி புருக்கை பெரிய தொகை கொடுத்து காவ்யா மாறன் வாங்கினார். எனினும் முதல் சில போட்டிகளில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.ராஜஸ்தானுக்கு எதிராக 13 ரன்களிலும், லக்னோக்கு எதிராக மூன்று ரன்கள் பஞ்சாப் எதிராக 13 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.

SRH Player Harry brook family members left the stadium midway

இது பெரும் ஏமாற்றமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஹாரி புருக், தன்னுடைய ஆட்டத்தை பார்க்க பெற்றோரை அழைத்திருந்தார். மகன் விளையாடியதை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்த போது, ஹாரி புருக்கின் காதலியும் எண்டிரி கொடுத்தார். காதலி முன் கெத்து காட்டலாம் என ஹாரி புருக் கணக்கு போட, திடீரென்று மைதானத்தில் இருந்து பெற்றோர்கள் பாதியில் சென்றுவிட்டனர்.

இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஹாரி புருக், 55 பந்துகளில் சதம் அடித்த பிறகும் கூட கொஞ்சம் பரபரப்பாகவே காணப்பட்டார். அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர்களுடன் பேசும் போது நடந்த உண்மையையும் அவரே உளறிவிட்டார். இந்த போட்டியை காண தமது கேர்ள் பிரெண்ட் இருந்ததாகவும், ஆனால் பெற்றோர்கள் பாதியில் சென்றுவிட்டதாகவும் கூறினார். எங்கு இருந்தாலும், எனக்காக பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

SRH Player Harry brook family members left the stadium midway

இதைத் தொடர்ந்து பேசிய அவர் தனக்கு சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள கொஞ்சம் சிரமம்மாக இருக்கிறது. இதனால் பவர் பிளேவில் அதிரடியாக விளையாட வேண்டும் என முடிவெடுத்தேன். சுழற் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது சிங்கிள்ஸ் எடுத்து மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடும் பணியை பார்த்துக் கொள்ளும் வகையில் திட்டத்தை மாற்றி வகுத்தேன். ஆனால் ஆடுகளம் இன்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதனால் என்னால் அதிரடியாக விளையாடி சதம் அடிக்க முடிந்தது.

SRH Player Harry brook family members left the stadium midway

நாங்களும் சரியான முறையில் பந்து வீசினால் மட்டுமே எங்களால் வெற்றி பெற முடியும். ஏனென்றால் ஆடுகளத்தில் மைதானப் பவுண்டரிகள் எல்லை எல்லாம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் நாங்களும் பொறுப்புடன் பந்து வீச வேண்டும். கொல்கத்தா அணியிலும் சில திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது என ஹாரி புருக் கூறியுள்ளார்.

Story first published: Friday, April 14, 2023, 22:20 [IST]
Other articles published on Apr 14, 2023
English summary
SRH Player Harry brook family members left the stadium midway
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+