Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருந்தாத SRH.. வந்த வரைக்கும் லாபம் என போட்டுத்தாக்கிய KKR - மும்பை, ஆர்ஆர்க்கு நெருக்கடி

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.3) டபுள் ஹெட்டர்ஸில், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத்தின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் கொலாப்ஸ் ஆகியுள்ளது.

 சோகம் தொடர்கதை

சோகம் தொடர்கதை

ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜேஸன் ராய், ரிதிமான் சாஹா களமிறங்கினர். ஏற்கனவே, பிளே ஆஃபை விட்டு வெளியேறிவிட்ட ஹைதராபாத் அணி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிதான் ஆடி வருகிறது. பாயிண்ட்ஸ் குறித்தோ, ரன் ரேட் குறித்தோ எந்த பிரஷரும் அந்த அணிக்கு இல்லை. ஆனாலும், அவர்களால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. சரி.. இனியாவது விட்டு விளாசும் என்று பார்த்தால், கொல்கத்தா அணிக்கு எதிராக முந்தைய கதையை தொடர் கதையாக்கி வருகிறது.

 2 விக்கெட்டுகள்

2 விக்கெட்டுகள்

வார்னருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஜேஸன் ராய், முதல் போட்டியில் அரைசதம் அடித்தாலும், அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் 10 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை. இன்று அவர் 13 பந்துகளை சந்தித்து 10 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். ரிதிமன் சாஹா, சவூதி வீசிய முதல் ஓவரிலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனால் அந்த அணி 16 ரன்களுக்கெல்லாம் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

 சமத் 25 ரன்கள்

சமத் 25 ரன்கள்

அதன்பிறகு, ஓரளவு செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்த கேன் வில்லியம்சன், 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாமல் ரன் அவுட்டாக, அவரது விக்கெட்டையும் இழந்தது. இதன் பிறகு ப்ரியம் கார்க் 21, அபிஷேக் ஷர்மா 6 ரன்களில் அவுட்டாக, அந்த அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் மட்டும் எடுத்தது, ஓப்பனிங், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என்று அந்த அணியின் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. கடைசி நம்பிக்கையாக இருந்த ஜேஸன் ஹோல்டர் வெறும் 2 ரன்களில் காலியாக, ஹைதராபாத்தின் கனவு சுக்கு நூறானது. அப்துல் சமத் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

 ராஜஸ்தானுக்கு நெருக்கடி

ராஜஸ்தானுக்கு நெருக்கடி

கொல்கத்தா அணியை பொறுத்தவரை, தற்போது 12 போட்டிகளில் விளையாடி, 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வென்றால், 12 புள்ளிகள் பெற்று, தனது பிளே ஆஃப் வாய்ப்பை இன்னும் உறுதியாக்கும். கொல்கத்தாவின் இந்த வெற்றி, மும்பைக்கும், ராஜஸ்தானுக்கும் தான் மேலும் நெருக்கடி அதிகரிக்கும்.

Story first published: Sunday, October 3, 2021, 21:27 [IST]
Other articles published on Oct 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+