For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒற்றை ஆளாய்.. கண்ட்ரோல் செய்த பிராவோ.. ஒரு பேட்ஸ்மேனால் கூட அடிக்க முடியல - சிஎஸ்கே மாஸ்

ஷார்ஜா: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.30) ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

 திடீர் சொதப்பல்

திடீர் சொதப்பல்

ஷார்ஜாவில் இன்று தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் சாஹா, தீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரில், 2 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டார். மற்றொரு தொடக்க வீரர் ஜேஸன் ராய் பொறுமையாக இன்னிங்ஸை தொடங்கினார். இந்நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். இதில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில், எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜேஸன் ராய். இதனால், ஹைதராபாத் தனது முதல் மற்றும் முக்கிய விக்கெட்டை இழந்தது. இதன் பிறகு கேப்டன் கேன் வில்லயம்சன் களமிறங்கினார். 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன், பிராவோ ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.

 ஏமாந்த வில்லியம்சன்

ஏமாந்த வில்லியம்சன்

ஆட்டத்தின், 6.3வது பந்தில் ஆஃப் சைடில் மிக மோசமான, வைட் பந்து ஒன்றை பிராவோ வீசினார். அந்த பந்துக்கு நோ-பால் கூட கொடுத்திருக்கலாம். அந்தளவுக்கு மோசமான வைட் பந்து. ஆனால், அம்பயர் வைட் மட்டுமே கொடுத்தார். அதற்கு அடுத்த பந்தை மெதுவாக 129 கி.மீ வேகத்தில் யார்க்கராக பிராவோ வீச, அவ்வளவு பொறுமையான பந்தை வில்லியம்சன் எதிர்பார்க்கவில்லை. பந்து நேராக அவரது பேடில் பட, அம்பயர் எந்தவித யோசனையும் இன்று அவுட் கொடுத்துவிட்டார். இதனால், ரிவ்யூ எடுக்கலாம் என்று சாஹா ஆலோசனை கொடுக்க, அதனை கேன் மறுத்துவிட்டார். ரிவ்யூ எடுத்தால் நிச்சயம் அது வீணாய் போகும் என்பதை உணர்ந்த வில்லியம்சன் அதனை தவிர்த்துவிட்டார்.

 142 ரன்கள் டார்கெட்

142 ரன்கள் டார்கெட்

இதன் பிறகு, ஹைதராபாத் அணியால் ரன்கள் குவிக்கவே முடியவில்லை. ரன் ரேட்டும் குறைவாகவே சென்றது. எப்போதாவது ஒன்றிரண்டு சிக்ஸர்கள் அடித்தார்களே தவிர, கன்சிஸ்டன்ஸியாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இளம் வீரர் ப்ரியம் கார்க் 7 ரன்களிலும், அபிஷேக், சமத் தலா 18 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேஸன் ஹோல்டர் வெறும் 5 ரன்களில் பிராவோ ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி, 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிராவோ நான்கு ஓவர்கள் வீசி, 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 ரஷீத் கான் மிரட்டுவாரா?

ரஷீத் கான் மிரட்டுவாரா?

ஹைதராபாத் அணியின் பலம் ரஷீத் கான் மற்றும் புவனேஷ் குமார் தான். இவர்கள் இருவரும் இன்று சிறப்பாக பந்து வீசினால், சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ரஷீத் கான் தனது மாயாஜால ஸ்பின் பந்துவீச்சில் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். தோனி போன்ற டாப் ஹிட்டர்கள் கூட, கடந்த காலங்களில் ரஷீத் ஓவர்களில் சொதப்பி இருக்கின்றனர். ஸோ, ஹைதராபாத் வெற்றிப் பெற வேண்டுமெனில், அணியின் X-Factor பவுலராக ரஷீத் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

Story first published: Thursday, September 30, 2021, 21:22 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
srh set 135 target to chennai super kings ipl 2021 - சிஎஸ்கே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+