For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன நடந்தாலும் கொடுக்க முடியாது.. நடராஜனுக்காக டீலிங் பேசிய அந்த அணி.. பின்னணியில் நடந்த சம்பவம்

சென்னை: தமிழக வீரர் நடராஜனை ஐபிஎல்லில் எடுக்க முக்கியமான அணி ஒன்று முயற்சி செய்ததாக தகவல்கள் வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் நெட் பவுலராக அறிமுகம் ஆன நடராஜன் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, மூன்று டி 20 போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி இவர் கவனம் ஈர்த்தார்.

இவரின் யார்க்கர் பவுலிங் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார் என்று கேப்டன் கோலி தொடங்கி பலர் இவருக்கு பாராட்டுகளை அளித்தனர்.

எப்படி

எப்படி

அதிலும் டி 20 தொடரில் இந்திய அணி வெற்றிபெற நடராஜன் மிக முக்கியமான காரணமாக இருந்தார் . இவர் மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து மேலே வளர்ந்து வந்தவர். இவருக்கு டிஎன்பிஎல் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் இரண்டும்தான் அடையாளம் கொடுத்தது. இதன் மூலமே இவர் வெளியுலகிற்கு தெரிய வந்தார்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் இவர் ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்தார். ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் நடராஜன் தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதன் மூலம் நடராஜன் இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

இந்திய அணி

இந்திய அணி

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இவரை டிரேடிங் முறையில் வாங்க முக்கியமான அணி ஒன்று முயற்சி செய்துள்ளது . ஹைதராபாத் அணி இந்த முறை நடராஜனை ரிலீஸ் செய்யவில்லை. இதனால் அவர் ஏலத்திற்கு வரவில்லை. இதனால் இன்சைட் டிரேடிங் மூலம் இவரை வாங்க ஒரு அணி முயற்சி செய்துள்ளது.

தெரியவில்லை

தெரியவில்லை

ஆனால் எந்த அணி இந்த முயற்சியை எடுத்தது என்று தெரியவில்லை. சிஎஸ்கே அல்லது பெங்களூர் அணி இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டெத் பவுலிங்கை சரி செய்யும் விதமாக இந்த அணிகள் நடராஜனை வாங்க முயன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இல்லை

இல்லை

ஆனால் நடராஜனை டிரேட் செய்ய ஹைதராபாத் அணி மறுத்துவிட்டது. பல கோடிக்கு இதற்காக டீலிங் பேசப்பட்டுள்ளது. ஆனால் என்ன நடந்தாலும் நடராஜனை கொடுக்க முடியாது என்று வார்னர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் நடராஜனை வரும் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் முன்னணி பவுலராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Story first published: Tuesday, January 26, 2021, 15:40 [IST]
Other articles published on Jan 26, 2021
English summary
SRH team doesnt want to release or Trade Natarajan to any other franchise in IPL 2021.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+