Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

300 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய ரெடியா பங்காளி.. மும்பைக்கு ஆப்பு வைக்கப்போகும் கம்மின்ஸ்.. எப்படி?

ஐதராபாத்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத் மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் 4லும் சேஸிங் செய்த அணியே வென்றிருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது. சில நாட்களுக்கு முன் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியை எளிதாக வீழ்த்தி மும்பை அணி கம்பேக் கொடுத்தது. மும்பை அணியை பொறுத்தவரை தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்று உச்சக்கட்ட நம்பிக்கையுடன் உள்ளது.

SRH vs MI Can Kavya Maran s SRH Score 300 runs against Mumbai Indians in the IPL 2025 at Hyderabad

ஐதராபாத் அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் தோல்வியடைந்தால், பிளே ஆஃப் கனவுக்கு முடிவு கட்டிவிட வேண்டியதுதான். தற்போது ஐதராபாத் அணிக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகம் என்னவென்றால், இந்த போட்டியை சொந்த மண்ணில் விளையாடுவதுதான். ஏனென்றால் தார் ரோடு பிட்ச் பயன்படுத்தப்படுவதால், எவ்வளவு பெரிய இலக்கையும் ஐதராபாத் அணியால் சேஸிங் செய்ய முடியும்.

அதேபோல் ரோஹித் சர்மாவை கம்மின்ஸ் 5 முறையும், முகமது ஷமி 3 முறையும் வீழ்த்தி இருக்கிறார்கள். இதனால் ரோஹித் சர்மா இந்த இரட்டை தாக்குதலில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை அணியின் மிடில் ஆர்டரை பொறுத்தவரை தார் ரோடு பிட்சில் முழுமையான திறமையை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசன் உள்ளிட்டோர் அளவிற்கு அதிரடியை வெளிப்படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான். இந்த சீசனில் ஐதராபாத் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் அந்த அணியின் ஸ்பின்னர்கள் தான். ஏனென்றால் 8 போட்டிகளில் ஐதராபாத் அணியின் ஸ்பின்னர்கள் வெறும் 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்கள் மோசமான விளையாடியது ஐதராபாத் அணியில்தான். இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியின் ஸ்பின்னர்கள் கூட 8 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். இதனால் மும்பை அணியின் மிடில் ஆர்டரை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், ஐதராபாத் அணியின் ஸ்பின்னர்கள் சீனுக்குள் வர வேண்டும்.

அதேபோல் ரோஹித் சர்மாவை கண்டாலே டிராவிஸ் ஹெட் வெளுக்க வாய்ப்பு இருப்பதால், இன்றைய ஆட்டத்திலாவது ஐதராபாத் அணி 300 ரன்களை அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை அணியிலும் பவர் பிளே ஓவர்களில் போல்ட் இதுவரை 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இதனால் ஐதராபாத் அணிக்கு சிறிய சான்ஸ் கிடைத்தாலும் மும்பை அணிக்கு ஆப்பு உறுதி என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, April 23, 2025, 10:24 [IST]
Other articles published on Apr 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+