Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு கேட்ச்சை மட்டும் பிடிச்சுருந்தா ஜெயிச்சுருக்கலாமே!! புலம்பும் ஹைதராபாத் ரசிகர்கள்!!

ஹைதராபாத் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் ரஷித் கான் முக்கியமான கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார். அது தான் இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கீரான் பொல்லார்டு பேட்டிங்

கீரான் பொல்லார்டு பேட்டிங்

மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த போது விக்கெட்களை தொடர்ந்து இழந்து வந்தது. 17 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது. அப்போது கீரான் பொல்லார்டு மட்டுமே, மும்பை அணியில் அதிரடியாக ரன் எடுக்கக் கூடியவராக களத்தில் இருந்தார்.

கேட்ச்சை நழுவ விட்டார்

கேட்ச்சை நழுவ விட்டார்

18வது ஓவரின் 2வது பந்தில் பொல்லார்டு கொடுத்த கேட்சை ரஷித் கான் நழுவ விட்டார். இதை பயன்படுத்திக் கொண்ட பொல்லார்டு கடைசி இரண்டு ஓவர்களின் 12 பந்துகளையும் தானே சந்தித்தார். அந்த இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் குவித்தார். இதனால், மும்பை அணி 136 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் தோல்வி

ஹைதராபாத் தோல்வி

அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. ஒருவேளை பொல்லார்டு கொடுத்த கேட்சை ரஷித் கான் பிடித்திருந்தால், மும்பை அணி 100-110 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

கூடுதல் ரன்கள்

கூடுதல் ரன்கள்

ஆனால், பொல்லார்டு எடுத்த கூடுதல் ரன்கள், ஹைதராபாத் அணிக்கு விக்கெட்கள் விரைவாக வீழ்ந்த போது அழுத்தமாக மாறியது. அதுவே அந்த அணியின் தோல்விக்கும் வித்திட்டது. இதனால், ஹைதராபாத் அணி ரசிகர்கள் "ஒரு கேட்ச்சால் மேட்ச் போச்சே" என புலம்பி வருகிறார்கள்.

அல்சாரி ஜோசப் அசத்தல்

அல்சாரி ஜோசப் அசத்தல்

மும்பை அணியின் அறிமுக வீரர் அல்சாரி ஜோசப் இந்தப் போட்டியில் 6 விக்கெட்கள் எடுத்து ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

Story first published: Sunday, April 7, 2019, 15:50 [IST]
Other articles published on Apr 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+