For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 விக்கெட் அள்ளிய மும்பை வீரர் அல்சாரி ஜோசப்.. சன்ரைசர்ஸ் படுதோல்வி! - முழு ரிப்போர்ட் #SRHvsMI

Recommended Video

IPL 2019: Mumbai vs Hyderabad | அல்ஜாரியின் பந்து வீச்சால் மும்பை வெற்றி

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் நல்ல வீரர்களைக் கொண்ட பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அந்த அணியை புரட்டிப் போட்டு, ஆறு விக்கெட்கள் எடுத்து படுதோல்வி அடையச் செய்தார் மும்பை அணியின் அறிமுக வீரர் அல்சாரி ஜோசப்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஹைதராபாத் அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா 11, டி காக் 19 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் அளித்தனர்.

திருப்புமுனை

திருப்புமுனை

அடுத்து வந்த இஷான் கிஷன் 17, சூர்யகுமார் 7, க்ருனால் பண்டியா 6 ரன்களில் வெளியேறினர். 18வது ஓவரில் கீரான் பொல்லார்டு கொடுத்த கேட்சை ஹைதராபாத் அணியின் ரஷித் கான் கோட்டை விட்டார். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனை.

பொல்லார்டு அதிரடி

பொல்லார்டு அதிரடி

18வது ஓவரின் முடிவில் மும்பை அணி 97 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. அடுத்த இரண்டு ஓவர்களில் பொல்லார்டு 39 ரன்கள் சேர்த்தார். மும்பை அணி முதலுக்கு மோசமில்லாமல் 136 ரன்கள் எடுத்தது, பொல்லார்டு 26 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார்.

சிறிய இலக்கு

சிறிய இலக்கு

அடுத்து ஹைதராபாத் அணி சேஸிங் செய்ய வந்தது. பேட்டிங்கில் வார்னர், பியர்ஸ்டோ இருப்பதால் 137 ரன்கள் என்ற சிறிய இலக்கை எட்டி, எளிதில் வெற்றி பெற்று விடும் என்ற எண்ணம் இருந்தது. பியர்ஸ்டோ 16 ரன்களில் ராகுல் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார்.

முதல் பந்தில் வார்னர் அவுட்

முதல் பந்தில் வார்னர் அவுட்

மலிங்காவிற்கு மாற்றாக இந்தப் போட்டியில் அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் அல்சாரி ஜோசப் தன் முதல் பந்தில் வார்னரை 15 ரன்களில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து விஜய் ஷங்கரை 5 ரன்களில் ஜோசப் வெளியேற்ற போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

தட்டுத் தடுமாறினர்

தட்டுத் தடுமாறினர்

அடுத்து வந்த ஹைதராபாத் அணி வீரர்கள் தட்டுத் தடுமாறி ரன் சேர்த்தனர். முக்கிய விக்கெட்களை இழந்ததால், தடுப்பாட்டம் ஆடத் துவங்கினர். மனிஷ் பாண்டே 16, ஹூடா 20, யூசுப் பதான் 0, ரஷித் கான் 0, முஹம்மது நபி 11 ரன்களில் வெளியேற ஹைதராபாத் அணியின் தோல்வி உறுதியானது.

அதிர்ச்சி அளித்த ஹைதராபாத்

அதிர்ச்சி அளித்த ஹைதராபாத்

17.4 ஓவர்களில் ஹைதராபாத் அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நூறு ரன்களைக் கூட அந்த அணி தாண்டாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அல்சாரி ஜோசப் சாதனை

அல்சாரி ஜோசப் சாதனை

அல்சாரி ஜோசப் 3.4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்தார். இதுவே ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த பந்துவீச்சு ஆகும். அதே போல, ஹைதராபாத் அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் இந்தப் போட்டியில் அந்த அணி எடுத்த 96 ரன்கள்.

Story first published: Sunday, April 7, 2019, 0:23 [IST]
Other articles published on Apr 7, 2019
English summary
SRH vs MI : Mumbai Indians beat Sunrisers Hyderabad by 40 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+