Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : சரித்திரம் படைத்த ஆர்சிபி.. 13000 டி20 போட்டிகளில் எந்த அணியும் செய்யாத மாபெரும் சாதனை

பெங்களூர் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதும் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை படைத்தது.

இதுவரை 13000க்கும் அதிகமான டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் எந்த அணியும் செய்யாத சேஸிங் சாதனையை செய்துள்ளது பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 287 ரன்கள் குவித்தது. ஒட்டுமொத்த டி20 போட்டிகள் வரலாற்றிலேயே இதுவே இரண்டாவது மிகப் பெரிய ஸ்கோர் ஆகும். மேலும், ஐபிஎல் தொடரின் வரலாற்றில் இதுவே ஒரு அணி எடுத்த மிகப் பெரிய ஸ்கோர் ஆகும்.

SRH vs RCB Royal Challengers Bengaluru breaks the record for scoring highest runs in a chase

இதை அடுத்து 288 ரன்களை சேஸிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது. அதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங்கில் மிக அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை செய்தது பெங்களூரு அணி.

மேலும், இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 549 ரன்கள் குவித்தன. டி20 வரலாற்றிலேயே ஒரே போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்தப் போட்டி.

ஐபிஎல் வரலாற்றிலும், ஒட்டுமொத்த டி20 போட்டிகள் வரலாற்றிலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடிக்கப்பட்டதும் இந்தப் போட்டியில் தான். இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்கள் அடித்தன. அதே போல ஒரே போட்டியில் அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட சாதனையும் இந்தப் போட்டியில் நடந்தேறி உள்ளது. மொத்தம் 43 ஃபோர் மற்றும் 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதன் மூலம் 81 பவுண்டரிகள் அடிக்கப்பட்டு ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட போட்டியாகவும் மாறி உள்ளது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். ஐபிஎல் தொடரில் இதுவே நான்காவது அதிவேக சதம் ஆகும்.

Story first published: Tuesday, April 16, 2024, 6:10 [IST]
Other articles published on Apr 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+