Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புயல் வேக பவுலர் மார்க் வுட் இல்லையா? ராகுல் கொடுத்த அதிர்ச்சி.. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங்!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா நீக்கப்பட்டு அன்மோல்ப்ரீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணி மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ளது.

16வது ஐபிஎல் சீசனுக்கான 10வது லீக் போட்டியில் லக்னோ - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது உள்ளது. டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்ற நிலையில், சென்னை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி உள்ளது.

இதேபோல் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய ஐதராபாத் அணி முனைப்புடன் உள்ளது. இந்த நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் அணியில் இணைந்துள்ளார். இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா நீக்கப்பட்டு அன்மோல்பிரீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அடில் ரஷீத், எய்டன் மார்க்ரம் மற்றும் புரூக் ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இம்பேக்ட் பிளேயராக மார்கோ யான்சன் களம் புகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் லக்னோ அணியில் புயல் வேகப்பந்துவீச்சாளரான மார்க் வுட் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் காயம் காரணமாக ஆவேஷ் கானும் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் லக்னோ அணியில் அமித் மிஸ்ரா மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SRH won the toss and chose to field against Lucknow in IPL 2023

ஐதராபாத் அணி விவரம்: மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், த்ரிபாட்டு, எய்டன் மார்க்ரம், ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷீத்

லக்னோ அணி விவரம்: கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், பூரன், ஷெப்பர்ட், குருணால் பாண்டியா, அமித் மிஸ்ரா, யாஷ் தாகூர், ஜெய்தேவ் உனாத்கட், ரவி பிஷ்னாய்

Story first published: Friday, April 7, 2023, 19:15 [IST]
Other articles published on Apr 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+