Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 முறை ஸ்டம்புகளை பறக்கவிட்ட உம்ரான்.. நோ பால் வீசி இந்தியா சாதனை.. இலங்கை அதிரடி.. ஷனாகா அபாரம்

புனே: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல், இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினர்.

முதல் டி20 போட்டியில் இழந்த இலங்கை அணி, தொடரை உயிரோடு வைத்திருக்க, இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கினர்.

தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் நிசாங்கா மற்றும் குசேல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி, இலங்கை ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

ஹர்திக் பாண்டியா முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசினாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் ஒரே ஓவரில் 3 முறை நோ பால் வீசி ஃபிரி ஹிட் கொடுத்தார். இதில் பவுண்டரி, சிக்சர்களை இலங்கை வீரர்கள் பறக்கவிட்டனர். இதன் மூலம் 5.1 வது ஓவரிலேயே இலங்கை அணி 5 ரன்களை தொட்டது.

குசேல் 50

குசேல் 50

சிறப்பாக விளையாடிய குசேல் மெண்டிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். வேகப்பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்குகிறார்கள் என தெரிந்த உடன் , ஹர்திக் பாண்டியா சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து, இலங்கை அணியின் ரன்களை கட்டுப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய மெண்டிஸ் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்

உம்ரான் மாலிக் விக்கெட்

உம்ரான் மாலிக் விக்கெட்

இதனைத் தொடர்ந்து அதிரடி ஆல்ரவுண்டர் ஹசரங்கா களத்திற்கு வந்தார். அப்போது உம்ரான் மாலின் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் அவருடய ஸ்டம்ப் பறந்தது. இதன் மூலம் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை சேர்ப்பதற்குள் 138 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கையை சுருட்டிவிடலாம் என நினைத்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஷனாகா அதிர்ச்சி அளித்தார்.

தடுமாறிய இலங்கை

தடுமாறிய இலங்கை

இதனைத் தொடர்ந்து அதிரடி ஆல்ரவுண்டர் ஹசரங்கா களத்திற்கு வந்தார். அப்போது உம்ரான் மாலின் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் அவருடய ஸ்டம்ப் பறந்தது. இதன் மூலம் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை சேர்ப்பதற்குள் 138 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கையை சுருட்டிவிடலாம் என நினைத்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஷனாகா அதிர்ச்சி அளித்தார்.

 ஷனாகா அபாரம்

ஷனாகா அபாரம்

ஷனாகா அதிரடியை காட்ட, உம்ரான் மாலிக் வீசிய 18வது ஓவரில் 21 ரன்களும், ஆர்ஸ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் 2 நோ பால் உள்பட 18 ரன்களை விட்டு கொடுத்தார்.இஅத போன்று சிவம் மவி வீசிய 20வது ஓவரில் 3 சிக்சர் உள்பட 20 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் ஷனாகா 20 பந்தில் அரைசதம் அடித்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் 7 நோ பால்களை வீசினர். இதில் ஆர்ஸ்திப் சிங் மட்டும் 5 நோ பால்களை வீசினார்.

Story first published: Thursday, January 5, 2023, 21:06 [IST]
Other articles published on Jan 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+