Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இன்டீஸ் தோற்க இலங்கை பிரார்த்தனை

கொழும்பு: இந்தியாவுடனான ஒரு தினப் போட்டித் தொடரில் 4-0 என தோல்வி அடைந்ததுடன், 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை இழந்தது.

12வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், 2019ல் நடக்க உள்ளது. இதில், 10 அணிகள் விளையாட உள்ளன.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியுடன், இந்தாண்டு செப்டம்பர் மாத இறுதியில், ஐசிசி தரவரிசையில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

நேரடி தகுதி

நேரடி தகுதி

தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகி்ஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகியவை நேரடியாக தகுதி பெற்று விட்டன. அந்த எட்டாவது அணி எது என்பதுதான் கேள்வி.

வாய்ப்பு போச்சு

வாய்ப்பு போச்சு

இந்தியாவுடனான தொடர் துவங்கியபோது, 2 போட்டிகளில் வென்றால், நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு இலங்கைக்கு இருந்தது. தற்போதைக்கு, இந்தியாவுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கடைசி ஒருதினப் போட்டியில் வென்றால், இலங்கை, 88 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நேரடியாக தகுதி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

தோற்றாக வேண்டும்

தோற்றாக வேண்டும்

ஆனால், வெஸ்ட் இன்டீஸ் அணி, அடுத்து விளையாட உள்ள, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில், ஒன்றிலாவது தோற்க வேண்டும். அடுத்த போட்டியில் இந்தியாவை இலங்கை வென்றாலும், அயர்லாந்துக்கு எதிரான ஒரு போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான, ஐந்து போட்டிகளிலும் வென்றால், வெஸ்ட் இன்டீஸ் நேரடியாக தகுதி பெற்றுவிடும்.

தோற்றால்

தோற்றால்

இந்தியாவுக்கு எதிராக இலங்கை தோற்றுவிட்டால், அயர்லாந்துடனான ஒரு போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகளில் வென்றால், வெஸ்ட் இன்டீஸ் தகுதி பெற்று விடும். இருந்தாலும், 2018ல் நடக்கும் தகுதி சுற்றுப் போட்டியின் மூலம், உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு இரண்டு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

கோப்பை யாருக்கு

கோப்பை யாருக்கு

இதுவரை உலகக் கோப்பையை வென்ற அணிகள்:

1975 - வெஸ்ட் இன்டீஸ், 1979 - வெஸ்ட் இன்டீஸ், 1983 - இந்தியா, 1987 - ஆஸ்திரேலியா, 1992 - பாகிஸ்தான், 1996 - இலங்கை, 1999 - ஆஸ்திரேலியா, 2003 -ஆஸ்திரேலியா, 2007 -ஆஸ்திரேலியா, 2011 -இந்தியா, 2015 -ஆஸ்திரேலியா.

Story first published: Saturday, September 2, 2017, 16:06 [IST]
Other articles published on Sep 2, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+