For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே நாளில் விழுந்த 20 விக்கெட்கள்.. பரபரப்பான நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்.. !

இலங்கை வெஸ்ட் இண்டீசிஸ் அணிகள் மோதும் போட்டியில், இலங்கை அணி வெற்றியை நோக்கி சென்றுள்ளது.

பிரிட்ஜ்டௌன்: இலங்கை வெஸ்ட் இண்டீசிஸ் அணிகள் மோதும் போட்டியில், இலங்கை அணி வெற்றியை நோக்கி சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் இன்று அதிக விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது.மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது.

SriLanka Vs Indies match: Asian Island players aim for a victory, West Indies aims fo wicket

இப்போட்டியில் பந்தை சேதப்படுத்தியதால் இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டது. மூன்றாவது போட்டி பிரிட்ஜ்டௌன் இல் நடைபெற்று வருகிறது. இது பகலிரவு டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.இப்போட்டியில் இலங்கை அணியின் கேப்டனாக லக்மல் பொறுப்பேற்றார்.

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.குமரா 4 விக்கெட்களையும் ,ரஜிதா 3 விக்கெட்களையும் எடுத்தனர்.வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 74 ரன்களையும் , கீப்பர் டௌரிச் 71 ரங்களையும் குவித்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.டிக்வெல்லா அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார்.

50 ரன்கள் முன்னிலை பெட்ரா வெஸ்ட் இண்டீஸ் , தனது இரண்டாவது இன்னிங்சில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இலங்கை தரப்பில் லக்மல் , ரஜிதா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இலங்கை அணி , வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டேரின் அபாரமான பந்துவீச்சில் , மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு தேவை இலங்கை அணியின் 5 விக்கெட்கள் மற்றும் இலங்கை அணியின் வெற்றிக்கு தேவை 63 ரன்கள். இலங்கை அணியின் மெண்டிஸ் 25 ரங்களுடன் களத்தில் உள்ளார்.இந்த பரபரப்பான சூழலில் நான்காம் நாள் ஆட்டம் இன்று இரவு தொடங்குகிறது.

ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று மொத்தம் 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 20 விக்கெட் வீழ்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 26, 2018, 18:26 [IST]
Other articles published on Jun 26, 2018
English summary
SriLanka Vs Indies match: Asian Island players aim for a victory, West Indies aims fo wicket .
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+