Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்தின் மிரட்டல் சதம் ரெடி.. 2வது ODIல் பிட்ச் கொடுத்த சர்ப்ரைஸ்.. டாஸில் தோற்றது நல்லது தானா??

கொல்கத்தா: இலங்கை அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ரசிகர்களுக்கு பரபரப்பு கொடுக்கும் வகையில் முடிவெடுத்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்திய அணி, தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் களமிறங்குகிறது. மற்றொருபுறம் இலங்கை அணி தொடரை சமன் செய்ய போராடவுள்ளது.

சுவாரஸ்யம் நிச்சயம்

சுவாரஸ்யம் நிச்சயம்

இந்நிலையில் இந்த பிட்ச் ரிப்போர்ட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது. ஈடன் கார்டனை பொறுத்தவரையில் வரலாற்றில் பேட்டர்களின் சொர்க்கமாக இருந்து வருகிறது. இங்கு பிட்ச் மிக சமமாக இருக்கும் என்பதால் பேட்டர்கள் சுலபமாக ஷாட் தேர்வு செய்யலாம். இதே போல அவுட் ஃபீல்டும் வேகமாக இருக்கும் என்பதால் பேட்டில் பட்டவுடன் படு வேகமாக பவுண்டரி சென்றுவிடும்.

நல்ல முடிவா

நல்ல முடிவா

இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம். ஏனென்றால் வெயிலில் பிட்ச் இன்னும் வரண்டு இருக்கும் என்பதால் ரன் வேட்டை நடத்தலாம். ஆனால் 2வது இன்னிங்ஸில் பிட்ச்-ல் சிறிய மாற்றம் ஏற்படும் என்பதால் இலக்கை விரட்டுவது கடினம். எனினும் இரவில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் 2வது பவுலிங் செய்யும் இலங்கை பவுலர்கள் சிரமப்படுவார்கள். எனவே கடைசி வரை பரபரப்பாக செல்லும்.

 ஒரே ஒரு மாற்றம்

ஒரே ஒரு மாற்றம்

இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹலை நீக்கிவிட்டு, அவருக்கு மாற்றாக குல்தீப் யாதவை கொண்டு வந்துள்ளார். அட்டகாசமான ஃபார்மில் உள்ள குல்தீப், ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காக இதே மைதானத்தில் நிறைய முறை விளையாடியுள்ளார். இதனால் அவரை கொண்டு வந்துள்ளனர்.

ரோகித்தின் சொர்க்கம்

ரோகித்தின் சொர்க்கம்

இந்த மைதானத்தில் ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தை பார்க்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இதே மைதானத்தில் தான் கடந்த 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 264 ரன்களை விளாசினார். இதே போல ஐபிஎல்-ல் ரோகித் ஒரே ஒரு சதம் தான் அடித்திருக்கிறார். அந்த சதமும் இதே ஈடன் கார்டனில் வந்தவை ஆகும்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்

Story first published: Thursday, January 12, 2023, 13:32 [IST]
Other articles published on Jan 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+