Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டிகளில் அதிக கேட்ச்.. வாவ்!! இது சின்ன தல ரெய்னாவோட ரெக்கார்ட்

சென்னை : ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர்களில் 'சின்ன தல' ரெய்னா முதலிடம் பிடித்துள்ளார்.

கிரிக்கெட் ஆட்டத்தில் கேட்ச் பிடிப்பது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது அனைவரும் தெரிந்த உண்மை. அதற்கேற்ப எதிரணியினர் கொடுக்கும் கேட்ச் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தும் அணிகளே வெற்றிபெறும்.

Star player suresh raina bagged 95 catches in ipl says bcci

ஐபிஎல் போட்டி, உலகின் பல்வேறு நாடுகளிலும் வரவேற்பு பெற்றுள்ளது. இது வரை 11 ஐபிஎல் தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பொழுதுபோக்கு நாயகனும் சென்னை அணியின் சிறந்த ஆல் ரவுண்டருமான வெய்ன் ப்ராவோ 69 கேட்ச்களுடன் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். மும்பை அணியின் மிகச்சிறந்த அதிரடி வீரரான பொல்லார்ட் 74 கேட்ச்களுடன் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார்.

கிரிக்கெட்டின் 'ஏலியன்' என ரசிகர்களால் அழைக்கப்படும் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ் 78 கேட்ச்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 79 கேட்ச்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

முதலிடத்தில், 'சின்ன தல' ரெய்னா அதிகபட்சமாக 95 கேட்ச்களுடன் யாரும் தொட முடியாத நிலையில் உள்ளார். சென்னை அணி கோப்பையை வெல்ல அதன் பீல்டிங்கும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 8, 2019, 11:30 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+