2022 டி20 உலககோப்பை - வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் சிக்கல்.. ஸ்டார் வீரர்கள் அதிரடி நீக்கம்
ஜமைக்கா: டி20 உலகக் கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை தகுதி சுற்றில் பங்கேற்கிறது.
மற்ற அணிகள் அறிவிப்பை வெளியிடும் போது, எந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று நாம் பார்ப்போம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு வெளியிடும் போது மட்டும் தான் நாம் யார் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
அந்த அளவிற்கு கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் ஏழாம் பொருத்தம். ஒரு காலத்தில் கிரிக்கெட்டை ஆண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி பிறகு திசை மாறி, பலம் குன்றிய அணியாக விளங்கியது.
இதனைத் தொடர்ந்து டி20 போட்டிகள் வந்த பிறகு, அதில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

சரிவு ஏன்?
ஆனால், தற்போது மீண்டும் அந்த அணி சரிவை நோக்கி செல்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியை விட, மற்ற டி20 தொடர்களில் விளையாடினால் நல்ல பணம் கிடைக்கிறது. இதனால், பல முன்னணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு விளையாட மறுக்கின்றனர். சரி, விளையாட வருகிறேன் என்று வரும் வீரர்களையும் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் பெரிய தொடரில் சேர்ப்பதில்லை.

யார் நீக்கம்?
இந்த நிலையில், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் அதிரடி வீரர் ஆண்டிரு ரஸில், நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், அதிரடி ஆல்ரவுண்டர் ஃபெபியன் ஆலன், ஹைடன் வால்ஸ் , அதிரடி ஆல்ரவுண்டர் ரோமேரியோ செஃப்ர்ட் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

யாருக்கு வாய்ப்பு?
இதில் ரஸில் கேரிபியன் பிரிமீயர் லீக் தொடரில் 4 போட்டியில் 17 ரன்கள் மட்டுமே அடித்தார் என்ற காரணத்திற்காக நீக்கப்பட்டதாக வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக்குழு தலைவர் ஹெய்னஸ் கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பையில் நட்சத்திர வீரர் எவன் லீவிஸ் அணிக்கு திரும்பியுள்ளார். சர்வதேச டி20 போட்டியில் விளையாடாத அதிரடி ஆல்ரவுண்டர் ரேமான் ரெய்ஃபர், லெக் ஸ்பின்னர் யானிக் கெரியா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்
1,நிக்கோலஸ் பூரான் (கேப்டன்), 2,ரோவ்மன் போவெல் (துணை கேப்டன்), 3, ஷிம்ரன் ஹேட்மயர், 4, ஜேசன் ஹோல்டர், 5, எவன் லிவிஸ், 6, கெயில் மெயர்ஸ், 7, அகேல் ஹூசையின், 8, மெக்காய், 9, அல்சாரி ஜோசப், 10,பிராண்டன் கிங், 11, ஓடியன் ஸ்மித், 12, செல்டன் கோட்ரேல் , 13, சார்லஸ். 14, யானிக் கெரியா (அலக் ஸ்பின்னர்), 15, ரேமான் ரெய்ஃபர் ( அதிரடி ஆல்ரவுண்டர்)


Click it and Unblock the Notifications