Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Punjab vs KKR: திடீரென அணைந்த லைட்.. மைதானத்தில் பதற்றம்.. 5 நிமிஷம் லேட்டாக கேகேஆர் பேட்டிங்!

மொஹாலி: பஞ்சாப் - கொல்கத்தா இடையிலான போட்டியில் மைதானத்தில் லைட் எரியாததால், 5 நிமிடங்கள் வரை இரண்டாவது பேட்டிங் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

16வது ஐபிஎல் சீசனின் 2வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதீஷ் ராணா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ராஜபக்சேவின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது திடீரென ஆட்டம் தடைபட்டது.

Start of the KKR innings was delayed due to a floodlight failure in Mohali Stadium

திடீரென ஏன் ஆட்டம் நிறுத்தப்பட்டது என்று விசாரிக்கையில், மைதாத்தின் உயர் மின் விளக்குகள் ( Floodlight ) எரியவில்லை என்று தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 3 ஃபிளட்லைட்டுகள் அணைந்தது தெரியவந்தது. இதனை சரி செய்வதற்கு கிட்டத்தட்ட 5 நிமிடங்களில் வரை தாமதமானது. இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.

கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டு நடத்தப்பட்டு ஐபிஎல் தொடரில் வீரர்களின் நேரம் மட்டுமல்லாமல் ரசிகர்களின் நேரமும் முக்கியமானது. திடீரென மைதானத்தில் மின் விளக்குகள் அணைந்ததுள்ளது, மைதான நிர்வாகிகளின் அலட்சியமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளில் மைதானத்தின் மின் விளக்குகளின் பரிசோதனையை முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 1, 2023, 18:09 [IST]
Other articles published on Apr 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+