Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினின் மனதை பாதித்த மாற்றுத்திறனாளி சிறுவனின் கிரிக்கெட் வீடியோ.. அவர் சொன்ன வார்த்தை!

Recommended Video

Sachin tweets on Inspirational video of kid madda ram playing cricket

மும்பை: செம்ம பாஸிட்வ் என்ர்ஜியுடன் இருப்பவர் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். எப்போதுமே அதைத்தான் தனது ரசிகர்களுக்கு அவர் கொடுப்பார். அவர் ஷேர் செய்த பாசிட்டிவ் மெசேஜ் சொல்லும் வீடியோ ஒன்று இளைஞர்களிடையே மிகப்பெரிய வைரலாகி வருகிறது.

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தோள்பட்டை வலியால் பல ஆண்டு அவதிப்பட்டு வந்தது ஊரறிந்த விஷயம். அதன்பிறகு அவர் தனது வலியில் இருந்து மீண்டு மிகப்பெரிய வரலாறுகளை கிரிக்கெட்டில் படைத்தார்.

அத்துடன் தோள் பட்டை வலிகளை பொருட்ப்படுத்தாமல் ஆடி இந்திய அணியை பல போட்டிகளை வெற்றி பெற வைத்தவர். 90ஸ் சிறுவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் தான். சச்சினை பார்த்து அவரைப்போல் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட குழந்தைகள் கோடிகளை தாண்டும்.

 நம்பிக்கை வாழ்த்து

நம்பிக்கை வாழ்த்து

என்றைக்கும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் சச்சின் டெண்டுல்கர்,மாற்றுத்திறனாளி சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 உங்களை உருக்கும்

உங்களை உருக்கும்

சச்சின் ட்விட்டரில் வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், இந்த குழந்தை மடா ராம் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் உத்வேகம் தரும் வீடியோவுடன் உங்கள் 2020 ஐத் தொடங்குங்கள். இது என் மனதை உருக்கியது, உங்களையும் உருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 சச்சினின் வார்த்தைகள்

சச்சினின் வார்த்தைகள்

அந்த வீடியோடிவில் மாற்றுத்திறனாளி சிறுவன் பந்தை அடித்துவிட்டு ரன்னுக்காக அதி வேகமாக தாவி தாவி செல்கிறான். இந்த வீடியோ ஏற்கனவே பல ஆயிரம் பேரை கவர்ந்த நிலையில் சச்சின் வார்த்தைகளோடு வந்த பிறகு உலகம் முழுவதும் மிகப்பெரிய வைரலாகி வருகிறது.

பலரும் பாராட்டு

ஊனம் என்பது தடையல்ல. அதை பொருட்டாக நினைக்காமல் விளையாடும் அந்த சிறுவனின் தன்னம்பிக்கை பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. நம்மால் முடியும் என்று நினைத்தால் தடைகள் உடைபடும். எதுவும் இங்கு தடையாக இருக்காது என்பதற்கு அந்த சிறுவன் உதாரணம் என்று சச்சினுடன் சேர்ந்து பலரும் பாராட்டி வருகிறார்கள்

Story first published: Wednesday, January 1, 2020, 14:32 [IST]
Other articles published on Jan 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+