Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியில் இருந்து நீக்கியது சரியான முடிவு".. ஸ்டீபன் ஃபிளெமிங் வாதம்

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நீக்கிவிட்டு இஷான் கிஷனை சேர்த்த இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு மிகவும் சரியானது என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறி இருக்கிறார்.

ஆக்லாந்தில் நடந்த 4-வது போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து கடந்த போட்டியில் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியிருக்கக் கூடாது என்ற விவாதம் கிளம்பியது. ஆனால் காயம் குணமடைந்து திரும்பிய சீனியர் வீரரான இஷான் கிஷனுக்கு உடனடியாக இடம் கொடுத்ததன் மூலம், இந்திய அணி நிர்வாகம் வீரர்களுக்கு மிகச் சிறந்த நம்பிக்கையை அளித்துள்ளதாக ஃபிளெமிங் பாராட்டியுள்ளார்.

Stephen Fleming Backs India s Decision to Drop Vaibhav Suryavanshi for Ishan Kishan in 4th T20I

இது குறித்து தொலைக்காட்சியில் பேசிய ஃபிளெமிங், "வைபவ் சூர்யவன்ஷிக்கான நேரம் எதிர்காலத்தில் நிச்சயம் வரும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்திய அணியின் இந்த முடிவு வீரர்களுக்கு மிகச் சிறந்த செய்தியைக் கொண்டு சேர்க்கிறது. டி20 கிரிக்கெட் என்பது நிலையற்ற ஆட்டம். மிகக் கடினமான சூழலில் அதிக ரிஸ்க் எடுத்து வீரர்கள் விளையாட வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில், தங்களின் இடம் பறிபோய்விடும் என்ற பயமும் சந்தேகமும் வீரர்களுக்கு வந்துவிட்டால் அவர்களால் சுதந்திரமாக ஆட முடியாது" என்றார்.

குல்தீப், வருண் சக்கரவர்த்திக்கு தொடர்ந்து பெஞ்ச்.. காரணம் என்ன? இந்திய அணியின் ஸ்பின் கோச் விளக்கம்

குல்தீப், வருண் சக்கரவர்த்திக்கு தொடர்ந்து பெஞ்ச்.. காரணம் என்ன? இந்திய அணியின் ஸ்பின் கோச் விளக்கம்

மேலும் பேசிய அவர், "அணியில் தங்களுக்கான இடம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற உத்தரவாதம் இருந்தால்தான், வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி துணிச்சலாக விளையாடுவார்கள்" என்று நிர்வாகத்தின் முடிவை நியாயப்படுத்தினார் ஃபிளெமிங்.
முன்னதாக இஷான் கிஷன் இல்லாத சமயத்தில் 2-வது மற்றும் 3-வது போட்டிகளில் வைபவ் களமிறங்கினார். அதில் 3-வது போட்டியில் 45 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் சீனியர் வீரர் இஷான் கிஷன் உடற்தகுதி பெற்று வந்தவுடன் அவருக்கு முன்னுரிமை கொடுத்து களமிறக்கிய கம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவை ஃபிளெமிங் முழுமையாக ஆதரித்துள்ளார். நான்காவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதே சமயம் இந்த தொடரை முன்பே கைப்பற்றியதால் 3-1 என முன்னிலையில் உள்ளது.

Story first published: Saturday, October 31, 2026, 12:37 [IST]
Other articles published on Oct 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+