For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் படைத்த சாதனை.. 3வது ஆஸி. வீரர் என்ற பெருமை.. ஷர்துல் கொடுத்த ஷாக்

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் மிக பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட் ஜோடியும் ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அணி பவுலிங்கிற்கு சிம்ம சொப்பனமாக ஸ்மித், டிராவிஸ் ஜோடி விளங்கினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 285 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் 4வது அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர் என்ற பெருமையை ஸ்மித், ஹெட் ஜோடி படைத்தது.

Steve smith acheived a milestone against India in test cricket

டிராவிஸ் ஹெட் 164 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடிய ஸ்மித், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31வது சதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஸ்மித் 19 டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி இந்த மைல்கல்லை எட்டினார்.இதில் 9 சதமும், 5 அரைசதமும் அடங்கும். சராசரியாக கிட்டத்தட்ட 70 ரன்கள் என்ற அளவில் வைத்திருக்கிறார். மேலும் இந்தியாவுக்கு எதிராக இந்த மைல்கல்லை எட்டிய 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு பாண்டிங் 2555 ரன்களும்,மைக்கிள் கிளார்க் 2049 ரன்களும், அடித்திருக்கிறார்கள்.

இதே போன்று இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் ஒட்டுமொத்தமாக 2000 ரன்கள் எடுத்த 8வது வீரர் என்ற பெருமையை ஸ்மித் படைத்திருக்கிறார். ஸ்மித் 121 ரன்கள் எடுத்த நிலையில், ஷர்துல் தாக்கூர் வீசிய பந்து, அவருடய ஆப் ஸ்டம்பை பதம் பார்த்தது.

Story first published: Thursday, June 8, 2023, 16:57 [IST]
Other articles published on Jun 8, 2023
English summary
Steve smith acheived a milestone against India in test cricket இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் படைத்த சாதனை.. 3வது ஆஸி. வீரர் என்ற பெருமை.. ஷர்துல் கொடுத்த ஷாக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+