For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷோலே பட கதாப்பாத்திரங்களுடன் டோணி, ஸ்மித்தை ஒப்பிட்ட ஹர்ஷ் கோயங்கா.. திருடர்கள் என்பதாக சர்ச்சை

By Veera Kumar

புனே: ஷோலே திரைப்படத்தில் வரும் ஜெய் மற்றும் வீரு கதாப்பாத்திரங்கள்தான் ஸ்மித்தும் டோணியும் என கூறியுள்ளார் புனே அணியின் உரிமையாளர் சகோதரரான ஹர்ஷ் கோயங்கா.

ஐபிஎல் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அவ்வப்போது டோணியை மறைமுகமாக சீண்டி வந்த ஹர்ஷ் கோயங்கா, திடீரென புகழ்ந்தும் டிவிட் செய்துள்ளார்.

இந்த நிலையில் ஐபிஎல் பைனில் புனே அணி தோல்வியடைந்த நிலையில், ஹர்ஷ் கோயங்கா மீண்டும் ஒரு டிவிட் செய்துள்ளார்.

டோணி-ஸ்மித் ஜோடி

இந்த டிவிட்டில், லாரல்-ஹார்டி, ஜெய்-வீரு, ஸ்மித்-டோணி என குறிப்பிட்டுள்ளார். ஹாலிவுட், பாலிவுட் ஜோடிகள் வரிசையில் ஸ்மித் டோணி ஜோடி என குறிப்பிட்டுள்ளார் ஹர்ஷ் கோயங்கா.

ஹிட்டான படம்

ஹிட்டான படம்

இது புகழ்ச்சி போல தெரிந்தாலும், ஜெய்-வீரு என்பது புகழ் பெற்ற இந்தி திரைப்படமான ஷோலேயில் வரும் கதாப்பாத்திரங்களாகும். 1975ல் வெளியான இந்த திரைப்படம் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க செய்தது.

இரு சூப்பர் ஸ்டார்கள்

இரு சூப்பர் ஸ்டார்கள்

அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா ஆகிய பாலிவுட்டின் அப்போதைய இரு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்த இந்த திரைப்படம், பல சாதனைகளை தகர்த்து வெற்றிக்கொடி நாட்டியது.

திருடர்கள்

திருடர்கள்

இதில் ஜெய் மற்றும் வீரு கதாப்பாத்திரங்களில் அமிதாப் பச்சனும், தர்மேந்திராவும் நடித்திருந்தனர். இருவரும் சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த திருடர்கள். பெரிய வில்லனை பிடிக்க இவர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

திட்டினாரா கோயங்கா?

திட்டினாரா கோயங்கா?

கோயங்காவின் டிவிட்டுகள் எப்போதுமே உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளன. அந்த வகையில் கோயங்கா புகழ்ந்தாரா அல்லது, ஸ்மித் மற்றும் டோணி அணியின் பணத்தை வீண் செய்துவிட்ட திருடர்கள் என திட்டினாரா என்பது ரசிகர்கள் மத்தியில் உள்ள பேச்சாக உள்ளது.

Story first published: Tuesday, May 23, 2017, 11:26 [IST]
Other articles published on May 23, 2017
English summary
Harsh Goenka, brother of RPS owner Sanjiv Goenka, compared his team's captain Steven Smith and MS Dhoni with the iconic Bollywood movie Sholay's pair of Jai and Veeru.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+