Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியானது.. பின்னடைவை சந்தித்த வில்லியம்சன்... இந்திய வீரர்கள் நிலை என்ன?

மும்பை: ஐசிசி-ன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல்களை ஐசிசி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசையை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்

மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்

இதற்கு முன்பு வரை நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் இருந்து வந்தார். ஆனால் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடததால் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளையும், வில்லியம்சன் 886 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

இந்திய வீரர்கள் நிலை

இந்திய வீரர்கள் நிலை

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவருடன் சேர்ந்து இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் டாப் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இந்திய வீரர் அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலின் டாப் 10 இடங்களில் அஸ்வினை தவிர வேறு எந்த இந்திய வீரரும் இடம் பெறவில்லை.

ஆல்ரவுண்டர் தரவரிசை

ஆல்ரவுண்டர் தரவரிசை

ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப்பட்டியலை பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் 412 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இவருக்கு அடுத்ததாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Wednesday, June 16, 2021, 19:35 [IST]
Other articles published on Jun 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+