Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்த முக்கியமான வீரர்கள் இல்லாத ராஜஸ்தான் அணி... சோதனையில இருந்து தப்பிச்சு வெற்றி பெறுமா?

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 7வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

அந்த அணியின் அடுத்தடுத்த முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில் இன்றைய போட்டி சவால் நிறைந்ததாக அந்த அணிக்கு மாறியுள்ளது.

இளம் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்களாக மாறியுள்ள ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது.

ராஜஸ்தான் -டெல்லி அணிகள் மோதல்

ராஜஸ்தான் -டெல்லி அணிகள் மோதல்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. அந்த வெற்றி தந்துள்ள நம்பிக்கை மற்றும் சிறப்பான பௌலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுடன் இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

பிரித்வி, ஷிகர் சிறப்பு

பிரித்வி, ஷிகர் சிறப்பு

கடந்த சிஎஸ்கேவிற்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியை டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் சிறப்பாக முடித்து கொடுத்தனர். அதிரடியாக ஆடும் ரிஷப் பந்த்திற்கே அந்த போட்டியில் அதிக வேலை இல்லாமல் போனது.

ஸ்பின்னர்களிடம் எதிர்பார்ப்பு

ஸ்பின்னர்களிடம் எதிர்பார்ப்பு

அதேபோல அந்த அணியின் சிறப்பான பௌலர்களும் அதிரடி பௌலிங்கை தந்து சிஎஸ்கேவை திணறடித்தனர். இதையடுத்து வெற்றி சிறப்பாக சாத்தியமானது. கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக பௌலிங் செய்துவரும் நிலையில், ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் அமித் மிஸ்ராவும் சிறப்பாக பந்துவீச பந்த் எதிர்பார்த்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் காயம்

பென் ஸ்டோக்ஸ் காயம்

ஆனால் கடந்த பஞ்சாப் கிங்ஸ்சிற்கு எதிரான போட்டியில் தனியாளாக இருந்து கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்களை குவித்த நிலையிலும் வெற்றியை கைகொள்ளாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறியது. அந்த அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இன்னும் அணியில் இணையவில்லை. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் அந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

கடந்த போட்டியில் புதிய பௌலர் சேத்தன் சகரியா சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். கிறிஸ் மோரீஸ், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோரும் சிறப்பான பந்துவீச்சை இன்றைய தினம் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் நீங்கியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, April 15, 2021, 18:15 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+