விஸ்வரூபம் எடுத்த சன்ரைசர்ஸ், பெங்களூர்.. ஐபிஎல் 2018ல் வலிமையான அணி எது தெரியுமா?
பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் முழுக்க முழுக்க ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து இருக்கிறது.
முக்கியமாக சென்னை அணி ஏலத்தில் ஏன் சில வீரர்களை எடுத்தது என்றே பலருக்கும் தெரியவில்லை. பேட்டிங் ஆர்டர், பவுலிங் ஆர்டர் வைத்து எந்த அணி சிறந்த அணி என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இதில் ஹைதராபாத் அணியும், பெங்களூர் அணியும் முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது.

பெங்களூர் அணி
இதில் பெங்களூர் அணியில் ஏற்கனவே கோஹ்லி, ஏபி டி என்ற உலகின் தலை சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்கள் போக மெக்குலம், சர்ப்ராஸ் கான் ஆகியோர் உள்ளனர், கோலின் மூன்றோ என்ற மரண ஆல்ரவுண்டர் இருக்கிறார். சாஹல், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் ஆகிய சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

ஹைதராபாத்
சன் ரைசர்ஸ் அணி பெங்களூர் அணி போலவே மிகவும் வலிமையாக இருக்கிறது. வார்னர், மனிஷ் பாண்டே என இரண்டு சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். தாவனும் இருக்கிறார். மிடில் ஆர்டருக்கு கேன் வில்லியம்சன் இருக்கிறார். இது போதாது என்று இளம் வீரர்கள் பலர். ரஷீத் கானை வேறு ஆர்டிஎம் மூலம் எடுத்து இருக்கிறார்கள்.

மும்பை அணி
மும்பை அணியும் மரண பார்மில் இருக்கிறது. பாண்டிய சகோதரர்கள், ரோஹித் சர்மா ஆகியோர் கலக்க இருக்கிறார்கள். பவுலிங் சென்சேஷன் பும்ரா வேறு அணியில் இருக்கிறார். இது போதாது என பொல்லார்ட், முஸ்தபிர் ரகுமான் ஆகியோரும் அணியில் இருக்கிறார்கள்.

சென்னை
சென்னை அணியும் ஒரு வகையில் பார்த்தால் வலுவாக இருக்கிறது. பல அனுபவம் நிறைந்த வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். இன்னும் ஓப்பனிங், ஸ்பீட் பவுலிங் செய்ய ஆள் எடுக்கப்படவில்லை. அதுபோக டோணி , ரெய்னா, ஹர்பஜன், ஜடேஜா, வாட்சன், ராயுடு என வித்தியாசமான அணி சென்னைக்காக எடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications