Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 பந்துகளில் சூர்யகுமார் அரைசதம்..பட்டையை கிளப்பிய கோலி..ஒரே ஓவரில் 26 ரன்கள்..இந்தியா இமாலய இலக்கு

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்க்கு எதிரான லீக் சுற்றில் இந்திய அணி 192 ரன்களை குவித்தது.

Recommended Video

India vs Pakistan ஆட்டத்தின் Highlights! Pandya முதல் Bhuvaneshwar வரை

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, சேஸ் செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற ஆடுகளத்தில் இந்தியா பேட்டிங் செய்தது.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ரோகித் அதிரடி

ரோகித் அதிரடி

இதனையடுத்து கேஎல் ராகுல் , ரோகித் சர்மா ஜோடி களத்துக்கு வந்தது. அப்போது ஆடுகளம் தோய்வாக இருந்ததால், பேட்டிங் செய்ய கொஞ்சம் சிரமமாக இருந்தது. எனினும் அதனை சமாளித்து ரோகித் சர்மா அதிரடியை காட்டினார். 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் 21 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்சரும், 2 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடினார்.

ராகுல் ஏமாற்றம்

ராகுல் ஏமாற்றம்

2 சிக்சர்களை ராகுல் அடித்தாலும் அமைதியோ.. அமைதி என்று சின்சான் போல், எதுக்கு வேகமாக அடிச்சிக்கிட்டு என்ற பாணியில் விளையாடினார். ஒர கட்டத்தில் ஹாங்காங் அணி அவரை ஆட்டமிழக்க செய்து மாபெரும் தவறை இழைத்துவிட்டது. ஆம் 39 பந்துகளை எதிர்கொண்ட 36 ரன்கள் அடித்த ராகுலை ஆட்டமிழக்காமல் அப்படியே அவரை வைத்து ஓட்டி இருக்கலாம்.

சூர்யகுமார் அதிரடி

சூர்யகுமார் அதிரடி

ஐடியா இல்லாத ஹங்காங், ராகுல் விக்கெட்டை வீழ்த்தியதும் சூர்யகுமார் களத்துக்கு திரும்பினார். கடினமான ஆடுகளமா எங்கே பார்ப்போம் என்ற பாணியில் பேட்டிங்கை தொடங்கிய சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக விராட் கோலி ஆடினாலும், பிறகு தனது முத்திரையை பதிக்க தொடங்கினார்.

26 ரன்கள்

26 ரன்கள்

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 31 அரைசதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். இதன் மூலம் 22 பந்துகளில் சூர்யகுமார் அரைசதம் விளாசினார். குறிப்பாக கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 26 ரன்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர் பறக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 26 பந்துகளில் 68 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Story first published: Wednesday, August 31, 2022, 21:48 [IST]
Other articles published on Aug 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+