Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RR vs RCB: ”நமக்கு ஒரிஜினல் டார்கெட் 49 தான்” ராஜஸ்தானை பொளக்கும் ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ் இதோ!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Stunning Memes after RCB won by 112 Runs against Rajasthan at Jaipur in IPL 2023

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் அதிக முறை டக் அவுட்டான ரோகித் சர்மாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்தார். இதனை பரிதாபங்கள் கோபி - சுதாகர் வீடியோவில், "எங்க மாமாக்கும் எனக்கும்தான் போட்டியே" என்று சொல்லுவார்கள். அதனை மாற்றி டிகே, "என் நண்பன் ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் தான் போட்டியே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Stunning Memes after RCB won by 112 Runs against Rajasthan at Jaipur in IPL 2023

பெங்களூரு அணியின் பேட்டிங்கின் போது, கடைசி நேரத்தில் களமிறங்கிய அனுஜ் ராவத் 10 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு சவாலாக இலக்கை பெங்களூரு அணியால் நிர்ணயிக்க முடிந்தது. இதனை ஸ்பைடர் மேன் படத்தில் பீட்டர் பார்க்கரை கொண்டாடும் போது, Careful, he is a Hero என்று மக்கள் கொண்டாடுவார்கள். அதில் வரும் ஸ்பைடர் மேனை அனுஜ் ராவத்தாக மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Stunning Memes after RCB won by 112 Runs against Rajasthan at Jaipur in IPL 2023

நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணி ஆடிய முதல் 5 போட்டிகளில் 4ல் வெற்றிபெற்றது. ஆனால் அடுத்ததாக விளையாடிய 8 போட்டிகளில் 6ல் தோல்வியடைந்துள்ளது. இதனை கம்பீரம் படத்தில் வடிவேலுவை அடித்துவிட்டு தளபதி தினேஷ், "இங்க இவ்ளோ பெரிய கலவரம் நடந்துருக்கு.. எங்கயா போனான் அந்த ஏட்டு" என்று ஆவேசமாக கேட்பார்.அதனை மாற்றி, "பிளே ஆஃப் ரேஸ் இவ்ளோ சீரியஸ போய்ட்டு இருக்கு.. எங்கயா போனான் இந்த ராஜஸ்தான்" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் அல்டிமேட்.

Stunning Memes after RCB won by 112 Runs against Rajasthan at Jaipur in IPL 2023

கடந்த சீசன் ரன்னர் அப்பான ராஜஸ்தான் அணி, நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை ரெண்டு படத்தில் வடிவேலு தவறுதலாக ஒருவரை அடித்துவிடுவார். அப்போது வரும் போண்டா மணி வடிவேலுவை பாராட்டி, அண்ணன், கைய கொடுங்கணே.. ஒரு மாமிஸ மலையவே சாச்சுட்டீங்க என்று சொல்லுவார். அதுபோல் வடிவேலுவாக ஆர்சிபி அணியையும், ராஜஸ்தான் அணியாக அடி வாங்கியவரையும் மாற்றி, மற்ற அணிகள் ஆர்சிபி அணியை பாராட்டுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Stunning Memes after RCB won by 112 Runs against Rajasthan at Jaipur in IPL 2023

அதேபோல் ராஜஸ்தான் அணி 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இருப்பினும் ஆர்சிபி அணி அடித்த 49 ரன்களை கடந்துவிட்டது. அதனை கிண்டல் செய்யும் வகையில் வின்னர் படத்தில் பிரசாந்திடம் வடிவேலு, "தம்பி.. ஆனது ஆகிப்போச்சு.. சட்டுப்புட்டுனு ஏரியாவ காலி பண்ணிட்டு நம்ம ஏரியா பக்கம் போய்ருவோம்" என்பார். அதனை மாற்றி, தம்பி இப்போதைக்கு ஒரிஜினல் டார்கெட் நமக்கு டார்கெட் இல்ல.. 49 தாண்டுறதுதான் டார்கெட்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

Story first published: Sunday, May 14, 2023, 22:20 [IST]
Other articles published on May 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+