Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”டேய் பல்தான்.. 4 மணிக்கு-லாம் என்னடா தூக்கம்” மும்பையை பொளக்கும் சென்னை ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்

அகமதாபாத்: குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Stunning Memes from Social Media after Chennai won the 5th IPL Trophy by defeating GT by 6 Wickets

சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி அசத்தினார். இதனை புதுப்பேட்டை படத்தில் அன்பு கதாபாத்திரம், "ஒரே ஆளு.. சும்மா சிங்கம் மாதிரி நின்னான்" என்று தனுஷை புகழ்ந்து சொல்லுவார். அதனை அன்பு கதாபாத்திரத்தை ரசிகர்களாகவும், தனுஷ் சாய் சுதர்சனாகவும் மாற்றி, "ஒரு ஆளு.. சும்மா சிங்கம் மாதிரி நின்னு வேட்டையாடிட்டு போய்ட்டான்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Stunning Memes from Social Media after Chennai won the 5th IPL Trophy by defeating GT by 6 Wickets

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு பாலுக்கு 2 ரன்கள் அடிக்க முடியாமல் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழப்பார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஒரே பந்தில் ஜடேஜா 4 ரன்களை விளாசி சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். தோல்வியடைந்த போது சூரரைப் போற்று படத்தில் சூர்யா அழுவதையும், வெற்றியடைந்த பின் அதே சூரரைப் போற்று படத்தில் வரும் "நம்ம ஜெய்ச்சுட்டோம் மாறா" என்று பின்னணியுடன் சூர்யா ஆனந்த கண்ணீர் விடும் புகைப்படத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் நெகிழ்ச்சி.

Stunning Memes from Social Media after Chennai won the 5th IPL Trophy by defeating GT by 6 Wickets

வரலாற்றில் முதல்முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டி 3 நாட்களாக நடந்து முடிவடைந்துள்ளது. இதனை ஆம்பள படத்தில் மனோபாலாவிடம் சிக்கும் தீவிரவாதியிடம், "இந்த ஆளுகிட்டலாம் சிக்குற அளவுக்கு வீக்கா இருந்துருக்கிறேடா" என்று சொல்லுவார். அதனை மாற்றி, "இந்த மைதானத்துல டெஸ்ட் போட்டியே 2 நாள் தாண்டாது.. நீங்க என்னடா டி20 போட்டிய 3 நாளா ஆடிட்டு இருக்கீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களின் மனசாட்சி.

Stunning Memes from Social Media after Chennai won the 5th IPL Trophy by defeating GT by 6 Wickets

2021ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போது, மும்பை ரசிகர்கள் 5 ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு பேசுங்கள் என்று கிண்டல் செய்தனர். இதனை நகரம் படத்தில் சுந்தர் சி-யிடம் சிக்கும் வடிவேலு, என் ஏரியாவுக்கு வாடா என்று உதார் விடுவார். அவர் சொன்னதற்கு ஏற்ப சுந்தர் சி, ஏரியா, தெரு என்று கடைசியாக வீட்டிற்கும் செல்வார். இதனால் வடிவேலு வேறு வழியில்லாமல் சுந்தர் சி காலில் விழுவார். அதனை மாற்றி, மும்பை ரசிகர்களாக வடிவேலுவையும் சிஎஸ்கே அணியாக சுந்தர் சியையும் மாற்றி, "டேய் 5 கப் அடிச்சாச்சு.. இப்ப என்ன பண்ணனும்" என்று கேட்க, அதற்கு மும்பை ரசிகர்கள், "ஒரு பேச்சுக்கு கப் அடிச்சுட்டு வானு சொன்னா.. இப்படியா அடிச்சுட்டு வந்து நிப்ப" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Stunning Memes from Social Media after Chennai won the 5th IPL Trophy by defeating GT by 6 Wickets

அதேபோல் மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் தந்தையை நடு ராத்திரியில் எழுப்பி வடிவேலு அடித்து திட்டுவார். அதனை மாற்றி, சிஎஸ்கே ரசிகர்களாக வடிவேலுவையும், மும்பை அணி ரசிகர்களாக வடிவேலு தந்தையும், ஆர்சிபி ரசிகர்களாக வடிவேலுவின் தாயையும் மாற்றி, டேய் பல்தான்.. பல்தான்.. வந்து கதவ தொறடா.. என்று சிஎஸ்கே ரசிகர்கள் அழைப்பதாகவும், அதற்கு ஆர்சிபி ரசிகர்கள், "எப்பா.. 2 மணி வரைக்கும் பைனல்ஸ் பார்த்துட்டு இப்போ தான்பா தூங்குறாரு" சொல்வதாகவும், அதற்கு சிஎஸ்கே ரசிகர்கள், விடிய காலை 4 மணிக்கெல்லாம் உனக்கு என்னடா தூக்கம் வேண்டி கிடக்கு என்று மும்பை ரசிகர்களை சிஎஸ்கே ரசிகர்கள் பொளப்பது போலும் உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க ரகம். இறுதியாக ஆர்சிபி ரசிகர்கள், "எப்பா.. அவரும் 5 டைம்ஸ் சாம்பியன் தான்-ப்பா.. பார்த்து பண்ணுப்பா" என்று சொல்வதாக முடிக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

Story first published: Tuesday, May 30, 2023, 9:30 [IST]
Other articles published on May 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+