"தக்காளி 100 ரன் தாண்டுவ" ஆர்சிபி பேன்ஸ் ரொம்ப பாவம்யா.. ரசிகர்களின் அதிரடி மீம்ஸ் இதோ!
கொல்கத்தா: 16வது ஐபிஎல் சீசனுக்கான போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி ஷர்துல் தாகூர் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதனை கொண்டாட ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ் பற்றி பார்க்கலாம்.

நேற்றையப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றதால், கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கொல்கத்தா மைதானத்தில் சிறந்த சராசரியும், ஆர்சிபி அணிக்கு எதிராக சிறந்த ரெக்கார்டும் வைத்திருந்ததால், ரஸ்ஸல் அதிக ரன்களை குவிப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். அவருக்கு பின் வந்த ஷர்துல் தாகூர் 29 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். இதனை சிவாஜி படத்தில் வில்லன், "மெயின் தலையே போய்ருச்சு" என்று சொல்வார். அதற்கு அவரது உதவியாளர், "இல்லங்க ஒன்னொரு தல வருதாம்" என்று பதில் அளிப்பார். இதில் ரஸ்ஸல்-க்கு, "Boss is No More" என்றும், ஷர்துலுக்கு, "New Boss is Arrived" என்றும் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்

கே.ஜி.எஃப்-2 படத்தில் ஒரு தங்க கட்டியை பறிமுதல் செய்ததற்காக கோபமடையும் ராக்கி பாய், துப்பாக்கியை பரிசோதிப்பதற்காக ஒரு காவல்நிலையத்தையே தரைமட்டமாக்குவார். அவரது பரிசோதனையின் போது காவல் நிலைய ஜீப்கள் அனைத்தும் அந்தரத்தில் பறக்கும். அந்த புகைப்படத்தை இணைத்து, வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் டூ பிளஸிஸ், மேக்ஸ்வெல், ஹர்சல் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ஓவர்களில் போல்ட்டான புகைப்படத்தை கொண்டு உருவாக்கப்பட்ட மீம் மாஸ் ரகம்.

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆர்சிபி அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. ஆனால் நேற்றைய போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதனை குறிப்பிட்டு, பரிதாபங்கள் யூடியூப் சேனல் புகழ் சுதாகர் பேசும் பிரபல வசனமான, "அவ்ளோ தான் இயல்பு நிலைக்கு திரும்பிட்டாங்க" என்று கேகேஆர் தோளில் ஆர்சிபி சாய்ந்துவிட்டதாக உருவாக்கப்பட்ட மீம் குபீர் ரகம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை ரோகித் சர்மா 14 முறை, டக் அவுட்டாகி அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனையை கையில் வைத்திருந்தார். அதனை நேற்றையப் போட்டியில் மன்தீப் சிங் முறியடித்தார். இதனை குறிப்பிட்டு, ஐயா படத்தில் அரிவாளுடன் நிற்கும் அல்வா சீனுவை ஏமாற்றி உயிருக்கு பயந்து வடிவேலு ஓடுவார். அதில் அரிவாளுடன் நிற்கும் அல்வா சீனுவை 14 டக் அவுட் உடன் நிற்கும் ரோகித் சர்மாவாகவும், அவரையே ஏமாற்றி ஓடும் 15 டக் அவுட்டுடன் ஓடும் வடிவேலுவாக மன்தீப் சிங்கையும் வைத்து உருவாக்கப்பட்ட மீம் ஜாலி ஃபீல்.

நேற்றையப் போட்டியில் விராட் கோலி சதம் விளாசுவார் என்று ஆர்சிபி ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 86 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனை திருவிளையாடல் படத்தில் வரும் தனுஷ் தனது தம்பியிடம், "தக்காளி நீ 10ஆம் கிளாஸ் கூட தாண்ட மாட்ட போலயே" என்று பேசியிருப்பார். அதே வசனத்தை ஆர்சிபி ரசிகர்கள் ஆர்சிபி அணியிடம், "கோலிகிட்ட 100 கேட்ட.. தக்காளி டீம் ஸ்கோரே 100 வராது போலயே" என்று உருவாக்கப்பட்ட மீம் உச்சக்கட்ட டிரால் மெட்டீரியல்.


Click it and Unblock the Notifications